புது பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்! கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம்

சென்னை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் … Read more

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி- நடுவானில் வெடித்து சிதறியதாக தகவல்

சியோல், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் … Read more

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட மத்திய மந்திரி…!

புதுடெல்லி, விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.  இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.  இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் … Read more

மீண்டும் ரெய்னா..!! ஐ.பி.எல். தொடரில் புதிய அவதாரம்..?!

புதுடெல்லி,  15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரெய்னாவை தக்கவைக்க முன்வரவில்லை.  இந்த சூழலில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் … Read more

'ரஷிய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி' – அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்!

வாஷிங்டன், உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச … Read more

"ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது": நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் விளக்கம்

புதுடெல்லி கடந்த 9-ந் தேதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது.  பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது. எனினும் பாகிஸ்தான் இதை ஏற்க மறுத்தது.  இந்த நிலையில், மேற்கூறிய விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை

பெங்களூரு, தனது அபார பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அஸ்வின், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.  அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட் மற்றும் நடப்பு தொடரில் 7 டெஸ்டில் 29 விக்கெட் என மொத்தம் 21 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த மிகப்பெரிய மைல்கல்லை … Read more

வேகமாக பரவும் ஒமைக்ரான்: முன் எப்போதும் இல்லாத அளவில் சீனாவில் கடும் நெருக்கடி..!!

பெய்ஜிங்,  சீனாவின் உகான் மாகாணத்தில்  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.  சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நாட்டில் உள்ள 19 மாகாணங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் – திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

புதுடெல்லி, மக்களவையில் இன்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரெயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது”என்றார். 

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: கேரளா பிளாஸ்டர்ஸ்-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை

பனாஜி, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  கோவாவில் … Read more