மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? – மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி

புதுடெல்லி உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலையிலேயே திமுக மக்களவை எம்.பி டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். அவை தொடங்கியவுடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில், “உக்ரைனிலிருந்து … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் லக்‌ஷயா சென் தோல்வி..!

முல்கேம் அன்டெர் ரூ, ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மற்றும் குன்லாவுட் விடிட்சர்ன் (தாய்லாந்து) மோதினர். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 18-21, 15-21 என்ற நேர் செட்டில் குன்லாவுட் விடிட்சர்னிடம் தோற்று கோப்பையை தவறவிட்டார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. முன்னதாக லக்‌ஷயா சென் … Read more

கனடா சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலி: வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்

புதுடெல்லி, கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், … Read more

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை அளித்த மாநிலம்..!!

போபால்,  விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.  நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.  இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி … Read more

விராட் கோலியுடன் ‘செல்பி’: மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

பெங்களூரு, இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது, ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி  நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து … Read more

கீவ் புறநகர் பகுதிகளில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்

லிவிவ், உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன. உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் … Read more

மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் – அதிமுக எம்.பி. தம்பிதுரை

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  மாநிலங்களையில் இன்று   மேகதாது அணை விவகாரத்தை எழுப்பிய  அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க முடியும்? … Read more

பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர்; இந்தியாவின் அனிர்பன் லஹிரி முன்னிலை!

புளோரிடா, அமெரிக்காவில நடைபெற்று வரும் பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடரில் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி முன்னிலை பெற்றார். அவர் அமெரிக்காவின் டாம் ஹோக் மற்றும் வரால்ட் வார்னர் ஜோடியை விட குறைவான புள்ளிகள் பெற்றார். கோல்ப் விளையாட்டை பொறுத்தவரை குறைவான புள்ளிகள் எடுப்பவரே வெற்றியாளர் ஆவார். புல்வெளி மைதானத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை அடிக்கும் போது ஒரே ஷாட்டில் பந்து இலக்குக்குரிய குழியில் விழுந்து விட்டால் குறைவான புள்ளி வழங்கப்படும். பந்தை குழியில் செலுத்துவதற்கு … Read more

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்..!!

பீஜிங்,  2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில்தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலம் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. ஆனால் சீனா கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இன்னமும் … Read more

மக்களவையில் பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு..!

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.  தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை … Read more