பண்டிகைக்காக பச்சை நிறத்தில் ஜொலிக்கும் சிகாகோ நதி..!

டவுன்டவுண், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வருடாந்திர பண்டிகையை முன்னிட்டு சிகாகோ நதியை பச்சை நிறமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆண்டுதோறும் புனித பேட்ரிக் திருநாள் மார்ச் 17-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் பச்சை நிற ஆடையணிந்து பங்கேற்பர். இதன் ஒரு பகுதியாக சிகாகோ நதியிலும் பச்சை நிற சாயம் கலக்கப்படும். 1962-ம் ஆண்டு முதல் நதிக்கு சாயம் பூசுவது நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக … Read more

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது!

புதுடெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.  பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்களின் … Read more

பெண்கள் புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியாவை வீழ்த்தியது ஜெர்மனி..!

புவனேஸ்வர், 9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய பெண்கள் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் புவனேஸ்வர் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா- ஜெர்மனி அணிகள் சந்தித்தன. வழக்கமான நேரத்தில் 1-1 … Read more

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் – போப் ஆண்டவர் வேண்டுகோள்

வாடிகன், உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்கள் பலரும் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐக்கிய நாட்டு சபை கோரிக்கை விடுத்தது. இதுபோல போப் ஆண்டவர் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். போப் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷியா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் … Read more

இந்திய ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி அதிரடி கைது – காஷ்மீர் போலீசார் தகவல்!!

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து குப்வாரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை சாய்த்தார் லக்‌ஷயா சென்..!

முல்கேம் அன்டெர் ரூ, ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) மோதினர். இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21-13, 12-21, 22-20 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார். அதுவும் கடைசி செட்டில் 16-19 என்ற … Read more

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் வீசி தாக்குதல் – அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்

இர்பில்,  ஈராக்கின் வடக்கு நகரமான இர்பிலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பிலில் நகரை நோக்கி ஏவப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஈராக் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சேதம் குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தநிலையில், மற்றொரு அமெரிக்க அதிகாரி ஒருவர், எந்த ஒரு அமெரிக்க அரசாங்க கட்டிடங்களில், சேதம் மற்றும் உயிரிழப்புகள் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர தெப்போற்சவம்…!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஸ்ரீவாரி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்பம் பவனி வருகிறது.  முதல் நாள் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 3-வது நாள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: ஐதராபாத் எப்.சி அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  அரைஇறுதியில் … Read more

சீனாவில் வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..! தொற்று எண்ணிக்கை 3,400 ஆக பதிவு

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா … Read more