ரஷிய படைகளுக்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு பேஸ்புக் அனுமதி

நியூயார்க், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். … Read more

சறுக்கலை சந்தித்தாலும்… உ.பி.யில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பா.ஜ.க.

லக்னோ, 403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  எனினும், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்த குற்றச்சாட்டு வாரணாசியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடத்த வாய்ப்பில்லை … Read more

தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படும் ஷேன் வார்னேவின் உடல்..!

பாங்காக், மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் அவரது உடல்,  இன்று அதிகாலை பாங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சென்றடைந்ததும், வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.  அதைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க … Read more

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்பு சேதமடைந்ததால் கதிர்வீச்சு அபாயம் – உக்ரைன் அரசு

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் செர்னோபில் அணு உலை பகுதியை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த நிலையில் செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் … Read more

கோவா தேர்தல்: மனோகர் பாரிக்கர் மகன் – பாஜக வேட்பாளர் இடையே கடும் போட்டி

பனாஜி, 40 தொகுதிகளுக்கான கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜகவும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 5 தொகுதிகளில் மகாராஷிடிரவாடி கோமண்டக் கட்சியும், 3 தொகுதிகளில் சுயேட்சைகளும், 1 தொகுயில் ஆம் ஆத்மியும் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையில், கோவா முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் … Read more

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பங்கேற்கமாட்டார்..!

பெல்கிரேட்,   செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச் இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில், இந்தியன் வெல்ஸில் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் பெயர் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி மெயின் டிராவில் இடம் பெற்றது, இது அவரது ரசிகர்களுக்கிடையே குழப்பத்திற்கு வழிவகுத்தது. தற்போது இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஜோகோவிச் பிபிசியிடம் தடுப்பூசி போடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார், மேலும் … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 528 பேருக்கு தொற்று உறுதி

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி … Read more

கோவா, உத்தரகாண்ட் , மணிப்பூரில் கடும் இழுபறி- முன்னிலை நிலவரம்

டேராடூன், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், கோவா மாநிலங்களில்  பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 201தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 71 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.  பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 76 இடங்களிலும்,  காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 8 … Read more

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

ஹாமில்டன், ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.  இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டு அவர் விளையாடுகிறார்.

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதில் பிரச்சினை – கமலா ஹாரிஸ் போலாந்து விரைவு

வார்சா, உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.  இதற்கிடையில், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு நாடுகள் வழங்கும் போர் விமானங்களுக்கு அதே அம்சங்களை கொண்ட புதிய போர் விமானத்தை அமெரிக்கா வழங்க முன்வந்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனுக்கு … Read more