துபாய்: பள்ளி பஸ்சை திருடி விற்ற இருவருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில்

துபாய்,  துபாயில் உள்ள தனியார் நிறுவனம் அருகே பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பஸ் ஒன்று நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் திடீரென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள குடோனில் வேலை பார்த்து வந்த 2 பேர் பஸ்சை திருடி சார்ஜாவில் உள்ள கார் நிறுவனத்தில் … Read more

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பலி..!

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பிரதாபன் தனது மனைவி செர்லி (54), மூத்த மகன் அகில் (26), மருமகள் அபிராமி (24) மற்றும் பெயர் வைக்காத 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வர்கலா நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார்கள்.  இந்நிலையில், பிரதாபன் வீட்டில் … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு!

பெர்லின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) சந்திக்கிறார்.  இதேபோல் காயம் காரணமாக பார்மில் இல்லாமல் தவித்து வரும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக … Read more

சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – 2 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்ற்ஞ்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ஹரஸ்டா நகர் மீது இஸ்ரேல் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.  இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை … Read more

உ.பி. கருத்துக் கணிப்புகள் முக்கியமில்லை: நாங்கள் தான் வெற்றி பெறுவோம் – அகிலேஷ் யாதவ்

லக்னோ, உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எனவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. இந்தநிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ்,  “கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு கிடைத்ததை காட்டட்டும், உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்”எனக் கூறினார். நேற்றுடன் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றது. … Read more

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் சேர்ப்பு!

பெங்களூரு,  இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) ஆட்டமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க தொடர் மற்றும் … Read more

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடையா? அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்,  ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்  வாங்குவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.  இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்  இறக்குமதியை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெள்ளை மாளிகையின்  பத்திரிக்கை செயலாளர் ஜென் சாக்கி பத்திரிகையாளர்களிடம் பேசும் … Read more

மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரி: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி,  மக்கள் மருந்தக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். மக்கள் மருந்தகங்களால் பலன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது, ‘‘ஏழை மக்களின் மருந்து செலவை குறைக்க இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்று அவர் கூறினார். பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது:- எதிர்கால சவால்களை மனதில் கொண்டு, நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் … Read more

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்…!

கெய்ரோ, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.  முன்னதாக நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஜெர்மனி மோதின. அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் … Read more

மஸ்கட்டில், புதிதாக மெட்ரோ ரெயில் சேவை: இம்மாத இறுதியில் ஆய்வு பணிகள்

மஸக்ட்,  ஓமன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்ட இயக்குனர் இப்ராகிம் பின் ஹமூத் அல் வைலி கூறியதாவது:- நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்து சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மஸ்கட் நகரில் புதிதாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான திட்டப்பணியை மேற்கொள்ளும் பொருட்டு இந்த மாத இறுதியில் மஸ்கட் நகரில் ஆய்வு பணி நடக்க இருக்கிறது. மொத்தம் 12 … Read more