உக்ரைனில் இருந்து நேற்று ஒரே நாளில் 3,772 மாணவர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி, உக்ரைனில் கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். முதலில் இந்த பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இதன் தொடர்ச்சியாக விமானப்படையும் களத்தில் குதித்தது. விமானப்படையின் சி-17 … Read more

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்

மவுன்ட் மாங்கானு, நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.  இந்த போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது.  சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் … Read more

’விமானங்கள் பறக்க தடை’ என அறிவிக்கக்குமாறு உக்ரைன் கோரிக்கை – நிராகரித்த நேட்டோ

கீவ், உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு … Read more

இந்தியாவில் இதுவரை 178.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, கொரோனா தொற்றுக்கு அணை போடும் விதமாக நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து கட்டம் கட்டமாக பல்வேறு பிரிவினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 178.52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்று மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் இரவு 7 மணி வரை 21 லட்சத்து 70 ஆயிரத்து 356 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஒமைக்ரான் … Read more

காலையில் மூத்த வீரருக்கு இரங்கல் தெரிவித்த வார்னேவுக்கு இரவில் இரங்கல் தெரிவிக்கும் சோகம்…

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே மரணம் அடைந்தார். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.  மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  அவருக்கு வயது 52. ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வார்னே, 2007ம் ஆண்டு … Read more

பாகிஸ்தான்: மத வழிபாட்டு தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – ஐ.எஸ். பொறுப்பேற்பு

லாகூர், பாகிஸ்தானில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் நேற்று குண்டு வெடிப்பு நடைபெற்றது. அந்நாட்டின் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டு தளம் உள்ளது. அந்த மத வழிபாட்டு தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. அப்போது, அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான். மேலும், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்கச்செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 56 பேர் … Read more

பீகாரில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து: உயிரிழப்பு 12 ஆக உயர்வு

பாட்னா, பீகாரின் பகல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கஜ்பாலிசாக் பகுதியில் வசித்து வரும் மகேந்திர மண்டல் என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று காலையில் பட்டாசு தயாரித்துக்கொண்டு இருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  அங்கிருந்த வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் மண்டலின் வீடு உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.  இது குறித்து தகவல் அறிந்து … Read more

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே திடீர் மரணம்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார். 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று பிணமாக கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது. … Read more

பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் ரஷியாவில் தடை..!

மாஸ்கோ, உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் விஷால் திவாரி, பாத்திமா தாக்கல் செய்த பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.  அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, “உக்ரைனில் உள்ள மனுதாரர் பாத்திமா தொடர்புகொள்ளப்பட்டுள்ளார். அவர் இன்றைக்குள் (நேற்று) விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார் என பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் … Read more