ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி; ஒடிசா அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – ஒடிசா  அணிகள் மோதின. ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியல் சீமா  போட்டியின் 23 மற்றும் 26-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். அவரை தொடர்ந்து ரீட்விக் தாஸ், முர்ரே  … Read more

மாலி: ராணுவ படைத்தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 27 வீரர்கள் பலி

பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மண்டூரா மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை … Read more

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 3 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹுருட்புரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 நபர்களை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அப்போது, அந்த 3 பேரும் பயங்கரவாதிகள் என்பதும் அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் … Read more

ஷேன் வார்னே மறைவு- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே இன்று காலமானார். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52. இவரது மரணம் கிரிக்கெட் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இவரது மரணத்திற்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: Shocked to learn about the sudden demise of … Read more

சீனா சென்ற புதிய இந்திய தூதருக்கு கட்டாய தனிமை

பீஜிங், சீனாவுக்கான புதிய இந்திய தூதராக பிரதீப் குமார் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பை ஏற்பதற்காக சீனாவுக்கு நேற்று சென்றடைந்தார். அங்கு கொரோனா கால கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நெறிமுறைப்படி அவர் கட்டாய தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள இந்திய தூதரகம், டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. அவர் ஷாங்காய் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டதைத் … Read more

மராட்டிய மந்திரி நவாப் மாலிக் மீதான வழக்கு; அமலாக்கத்துறை காவல் 7-ந் தேதி வரை நீட்டிப்பு

மும்பை, தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இதில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களிடம் நிலம் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை கடந்த 23-ந் தேதி கைது செய்து விசாரித்து வந்தது. இதில் விசாரணை காலம் முடிந்து … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் டென்மார்க்-இந்தியா இன்று மோதல்

புதுடெல்லி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது.  இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஒற்றையர் பிரிவின் முதலாவது ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், கிறிஸ்டியன் சிக்ஸ்காட்டையும், மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, மைக்கேல் டார்பேகாட்டையும் சந்திக்கின்றனர். சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் பிரிவின் ஆட்டத்தில் திவ்ஜி சரண் மற்றும் ரோகன் போபன்னா ஜோடி பிரெட்ரிக் நீல்சன் மற்றும் … Read more

ரஷியா படையெடுக்கலாம் என அச்சம்: ஐரோப்பிய யூனியனில் சேர விண்ணப்பித்த முன்னாள் சோவியத் நாடுகள்

முனிச்,   உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி … Read more

உக்ரைன் போர்: மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்

புதுடெல்லி, ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி வந்தடைந்த இந்தியர்களை பாதுகாப்பு துறை இணை அதிகாரி அஜய் … Read more

சென்னையில் 3 நாட்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டி..!

சென்னை, நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.  ஆண்கள் பிரிவில் கல்லூரி அணிகளான எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங், டி.ஜி.வைஷ்ணவா, சத்யபாமா, லயோலா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.  பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம்., … Read more