உக்ரைனில் நிலைமை மேலும் மோசமடையலாம் – புதினிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் அதிர்ச்சி தகவல்

பாரிஸ், உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் – குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ ஆகும்.   இந்நிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்திய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான … Read more

இந்தியா-இலங்கை முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

மொகாலி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா … Read more

ரஷியாவில் உலக வங்கியின் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன. இந்த நிலையில் ரஷியாவிலும், அதன் கூட்டாளியான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மற்றும் உக்ரைன் மக்களுக்கு … Read more

பொருளாதாரம் சீரான வளர்ச்சியை கண்டு வருகிறது – நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார்

புதுடெல்லி, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். பொருளாதாரம் மீண்டு வருவது போதிய வலிமையுடன் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது;- “இந்த விவகாரத்தை தனித்தனியாக பார்க்க வேண்டும். வேளாண்துறை சிறப்பாக செயல்பட்டது. எப்போதும் 3 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டு வருகிறது. உற்பத்தி துறையை எடுத்துக் கொண்டால், அதில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அதற்கு கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, நுகர்வோர் … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது..!

கெய்ரோ, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 60 நாடுகளை சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.  இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் ஸ்ரீநிவேதா, இஷா சிங், ருசிதா வினிர்கர் அடங்கிய இந்திய அணி 16-6 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. மேலும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஆண்கள் … Read more

உக்ரைன் போர்: ரஷியா மீது சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை

தி ஹேக், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நேற்று ஒரு வாரத்தை எட்டியுள்ளது. முதலில் ராணுவ கட்டமைப்புகளை குறியாகக் கொண்டுதான் தாக்குதல் நடத்தப்படும் என ரஷியாவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போரில் இலக்கு வைக்கப்படுகிற தலைநகர் கீவ் தொடங்கி கிர்காவ் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் சரமாரியாக நடந்து வருகின்றன.  இது மனித உரிமையை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தடை செய்யப்பட்டுள்ள வெற்றிட குண்டுகளையும் (Vacuum … Read more

பெங்களூருவில் 13-வது சர்வதேச திரைப்பட விழா – பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்

பெங்களூரு, கர்நாடக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 13-வது சர்வதேச திரைப்பட விழா பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வெளிநாட்டு படங்களும் இதில் பங்கேற்றுள்ளன இதன் தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- “கன்னட திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டும் என்றால், மக்களின் மனங்களை வெல்லும் வகையில் படங்களை எடுக்க வேண்டும். திரைப்படங்களை எடுப்பதில் உயர்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையை வீழ்த்தியது ஏடிகே மோகன் பகான்..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் சென்னை அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி சார்பில் … Read more

2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க இரு நாடுகளும் ஒப்புதல்

மாஸ்கோ, உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more