விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

மொகாலி, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  தற்போது இப்போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு  பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த போட்டி … Read more

உக்ரைன் போர்… மிக சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டு வீசிய ரஷியா..!

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு … Read more

ஷீரடி சாய்பாபா கோவில்: அதிகாலை, இரவு நேர பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி

மும்பை, மராட்டியத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.  இந்த நிலையில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. எனவே ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் பக்தர்கள் அதிகாலை, இரவு பூஜையில் கலந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.  இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இன்று நடைபெற்ற  ஆட்டத்தில் ஐதராபாத் – ஜாம்ஷெட்பூர்  அணிகள் மோதின.போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய  ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். அந்த அணியின் பீட்டர் ஹார்ட்லி  போட்டியின் 28-வது … Read more

ரஷியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடா, உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷியா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷியாவின் மோசமான தாக்குதலை கண்டு பல்வேறு நாடுகள் பலவித பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்கக்கூடாது என தடை விதித்துள்ளன.  இந்த நிலையில், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய … Read more

உக்ரைன் தலைநகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் – மத்திய அரசு

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 6-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து … Read more

பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடை; உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவிப்பு

மலேசியா, உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.   இதனால் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷிய அணி கால்பந்து தொடர்களில் பங்கேற்க பிபா கூட்டமைப்பு ஏற்கனவே தடை செய்துள்ளது. இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷியா … Read more

ரஷிய விமானப்படை தாக்குதல்! கார்கிவ் நகரில் பொதுமக்கள் 8 பேர் பலி!!

கீவ், ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் கீவ் நகரில்  உள்ள உளவுத்துறை அலுவலகங்களுக்கு அருகேயுள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.  இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமாக கருதப்படும் கார்கிவ் நகரில், ரஷிய விமான படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக இன்று அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் … Read more

மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா

மும்பை, மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 78 லட்சத்து 66 ஆயிரத்து 380 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 77 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் குணமாகி உள்ளனர்.  தற்போது 6 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் 5 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதேபோல மாநிலத்தில் புதிதாக … Read more

2021 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதை வென்றார் பி.வி.சிந்து

தெலுங்கானா,   உலக பாட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் பி.வி.சிந்து. இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். இந்த நிலையில் பாட்மிண்டன் துறையில் இவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக தெலுங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்  சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்  விருது இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more