ஐ.எஸ்.எல். கால்பந்து; ஐதராபாத் – மும்பை அணிகள் நாளை மோதல்

ஐதராபாத், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று ஓய்வு நாளாகும் .இந்நிலையில், இந்த தொடரில் நாளை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி, ஐதராபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் – மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் 12வது இடத்திலும்,மும்பை அணி 6வது … Read more

ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலீபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்த ஆப்கானிய அகதிகளை அரசாங்கம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளின் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு நாட்டு வீரர்களும் … Read more

எச்சில் துப்பிய தண்ணீர்… திருவனந்தபுரம் அரசு கலைக்கல்லூரியில் ராகிங்; 7 மாணவர்கள் இடைநீக்கம்

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் காரிய வட்டம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், தன்னை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து துன்புறுத்தியதாக முதல்வரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ராகிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணையில், கடந்த 11-ந்தேதி சீனியர் மாணவா்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 2 ஜூனியர் மாணவர்களை … Read more

துபாய் ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரைபகினா

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா , ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி ரைபகினா சிறப்பாக விளையாடினார் . இதனால் 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ரைபகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  ரைபகினா  Tennis 

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய … Read more

காதலியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து மனைவியை தீர்த்து கட்டிய தொழிலதிபர்

சண்டிகார், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவராக இருப்பவர் அனோக் மிட்டல் (வயது 35). தொழிலதிபரான இவருடைய மனைவி லிப்சி மிட்டல். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அனோக் மிட்டலுக்கு 24 வயதுடைய இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை லிப்சி கண்டுபிடித்து விட்டார். இதனால், அவரை தீர்த்து கட்ட அனோக் முடிவு செய்துள்ளார். இதற்காக காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தேலோ நகருக்கு மனைவியுடன் அனோக் … Read more

புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

புவனேஷ்வர், 6-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. பிற்பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய … Read more

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய மந்திரி இன்று பேச்சுவார்த்தை

மாஸ்கோ ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார் . உக்ரைன் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வழியாக உரையாடினர். அப்போது உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு அமெரிக்க தரப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இதனை புதின் … Read more

மத்திய பிரதேசத்தில் வேன் மீது லாரி மோதி விபத்து – 5 பேர் பலி

போபால், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், திருமண விழாவிற்கு சென்ற கோஷ்டியினர், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் வேனை நிறுத்தி, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். வேனிலும் சிலர் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேன் மீதும், நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் … Read more

இந்திய தேசிய கொடி கராச்சி மைதானத்தில் ஏன் ஏற்றப்படவில்லை? பாக். கிரிக்கெட் வாரியம் விளக்கம்

கராச்சி, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் … Read more