புரோ கபடி லீக் போட்டி; புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி!

பெங்களூரு, பெங்களூருவில் நடந்து வரும் 8-வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது.  மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.  இன்னொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் … Read more

செல்போனை பார்த்தபடி மேல்தளத்தில் விழுந்தவர், கீழ்தளத்தில் எழுந்தார் – வைரலாகும் வீடியோ..!

இஸ்தான்புல், துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் உள்ள குடோனில் பொருட்களை அடுக்கி கொண்டிருந்தனர். கீழ் தளத்தில் பொருட்களை வைப்பதற்காக தளத்தின் தரையில் இருந்த சிறிய அடைப்பு பகுதியை திறந்து வைத்திருந்தனர். அப்போது அப்துல்லா மட் என்ற 19 வயது இளைஞர் செல்போனை பார்த்துக் கொண்டே வந்ததில் தரையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அடைப்பை கவனிக்கவில்லை. அருகில் இருந்த ஊழியரும் வேலை செய்வதில் கவனமாயிருந்ததால் அப்துல்லாவிடம் இதுகுறித்து சொல்லவில்லை. … Read more

இரு மாநில தேர்தல் 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி – 21.18%, பஞ்சாப் – 17.77%

புதுடெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதைப்போல்,பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் சற்று முன்னதாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. அதன்படி,இத்தேர்தலில் 1304 வேட்பாளர்கள் … Read more

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி; கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் … Read more

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு!

வாஷிங்டன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது. அமெரிக்கா ஒரே நாளில் 41,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும்,  ஒரே நாளில் 715 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை … Read more

பழைய வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு முடிவு

புதுடெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவின்படி, டெல்லியில் 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்று மாசுபாட்டிற்கு எதிராக போராடும் வகையில்  டெல்லி அரசு,  அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் உள்ள  பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளது. டெல்லி அரசின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 12 எலெக்ட்ரிக் … Read more

ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் – இத்தாலி வீரர் பெரட்டினி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ரியோ டி ஜேனிரோ, ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் பிரேசில் வீரர் மோண்டேரோவுடன் பெரட்டனி மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெரட்டினி வென்றார். இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் மோண்டேரோ கைப்பற்றினார்.  இதனையடுத்து வெற்றியாளரை நிர்மாணிக்கும் கடைசி செட்டை 6-3 என்ற கணக்கில் பெரட்டினி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இன்று இரவு நடைபெறும் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் உடன் … Read more

இன்றுடன் நிறைவடைகிறது குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர்: 35 பதக்கங்களுடன் முதலிடத்தில் நார்வே…!

பிஜீங், ஒலிம்பிக் போட்டி போல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இதில் இடம் பெறும். இதன்படி 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுடன் 24-ந் தேதி நிறைவடைகிறது. சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், நார்வே 15 … Read more

ஆற்றில் கார் கவிழ்ந்து கோர விபத்து.. மணமகன் உட்பட 9 பேர் பலியான சோகம்!

கோட்டா, ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து  காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நயாபுரா கல்வெட்டில் இருந்து  கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர … Read more

இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் ஜடேஜா, சஞ்சு சாம்சன்..!!

புதுடெல்லி,  இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பினர். இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது … Read more