ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; ரஹானே, புஜாரா களம் இறங்குகிறார்கள்

ஆமதாபாத்,  ‘இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி 1935-36-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் இந்த சீசனில் ரஞ்சி ஆட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி 87-வது ரஞ்சி கிரிக்கெட் … Read more

பிரான்ஸ்: விளையாட்டுகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடைசெய்யும் மசோதா – தேசிய சட்டமன்றத்திற்கு அனுப்பி வைப்பு

பாரிஸ், பிரான்சில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் வெளியே தெரியும்படி மத அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடைசெய்யும்  வரைவு மசோதாவிற்கு செனட் சபை வாக்களிக்க மறுத்ததை அடுத்து, இந்த மசோதா பிரான்சின் தேசிய சட்டமன்றத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மசோதாவில் பழமைவாத மேல் சபையால் திருத்தமாகச் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து உள்ளது. அது விளையாட்டு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் ‘வெளியே தெரியும்படி மத அடையாளங்களை வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடுகிறது. இந்த மசோதா கீழ்சபையில் … Read more

கிணற்றின் மேல்தளம் உடைந்ததால் உள்ளே விழுந்து 13 பெண்கள் பலி – திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய சோகம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது விருந்தினர்களில் பெண்கள் வீட்டிற்கு பின்னால் அமைந்திருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.  கிணற்றின் மேல் பகுதி இரும்பு வலையான ஆன கான்கிரீட் மேடை அமைக்கபப்ட்டிருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணியில் ரஹிம் அலி 2-வது நிமிடத்திலும், … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.12 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் … Read more

20 ஓவர் கிரிக்கெட்: பந்து வீச்சாளர் தரவரிசையில் ஹேசில்வுட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவாிசையில் டாப்-4 இடங்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி), முகமது ரிஸ்வான் (798 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (796 புள்ளி), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (729 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்தியாவின் விராட் கோலி 10-வது இடமும், ரோகித் சர்மா 11-வது இடமும் வகிக்கிறார்கள். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் … Read more

பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

பிரேசிலியா, தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக இந்த கனமழையால் … Read more

‘இந்திய பொருளாதாரம் வேகமாக வளருகிறது’ – நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி,  2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் வளர்ச்சி விகிதம் உந்தப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், “உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களால், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும். பன்னாட்டு நிதியம், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியை முந்தைய கணிப்பை விட குறைத்துள்ளது. ஆனால், இந்திய பொருளாதார வளர்ச்சியை … Read more

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; மலேஷியாவிடம் தோல்வியடைந்த இந்தியா!

ஷா அலாம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியா நேற்று நடைபெற்ற தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேஷிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் இந்தியா மலேசியாவிடம் வீழ்ந்தது. எனினும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாரா ஷா வெற்றி பெற்றனர். மற்ற 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர். முன்னதாக தென் … Read more