ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி … Read more

சீனாவில் பஸ் வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்

பெய்ஜிங், வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 42 பேர் காயமடைந்தனர். லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங் நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. வெடிப்பு ஏற்பட்டபோது பெரும் சத்தம் கேட்டதாகவும் ஆனால் பேருந்து தீப்பிடிக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் பெரும் காயமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பைச் சிதறலுடன் பஸ் … Read more

‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி,  பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி ஒலிபரப்பாகிறது. இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த மாதத்தின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பிப்ரவரி 27-ந் … Read more

புரோ கபடி லீக்: யு மும்பாவை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ்

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா அணிகள் மோதின.  விறுவிறுபாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அனி 37-26 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 45-37 என்ற … Read more

உக்ரைனில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

கீவ், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இருதரப்பினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. ஓட்டலில் இருந்த அனைவரும் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த நபர்கள் தொடர்ந்து … Read more

தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!

கொல்கத்தா, மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மேதினிபூர் நகரில் உள்ள கஞ்சவதி ஆற்றின் கரையில் பகுதியில், ரெயில் பாலத்திற்கு அருகில் ஒரு சுற்றுலா இடம் உள்ளது. மிதுன் கான்  (வயது 36), அப்துல் கெய்ன் (வயது 32), உள்ளிட்ட 3 இளைஞர்கள் இந்த பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். மிதுன் மற்றும் அப்துல் இருவரும் … Read more

சச்சின் டெண்டுல்கரின் மகனை ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த மும்பை அணி

பெங்களூரு, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2-ஆம் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்றது. ஏலத்தில் கடைசி நாளான இன்று தங்களுக்கு தேவையான வீரர்களை அணிகள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தன.   இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் மகனும், இந்திய வீரருமான அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலை எதிர்த்து உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

கைவ், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான … Read more

அசாம் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – சந்திரசேகர ராவ்

ஐதராபாத், உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ … Read more

தமிழ் பெண்ணை மணக்க இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி. கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.  அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என … Read more