ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக, புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் இருந்து கிழக்கு வடகிழக்கே 164 கிலோமீட்டர் தூதரத்தில் நேற்று இரவு 11.34 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் பொருள்சேதம், … Read more

பணக்கார பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து ரூ. 60 லட்சம் சுருட்டிய பெண்..!

புனே,  மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 28 வயது பெண் ஒருவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் நாளிதழில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காக நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தொடக்கத்தில் பாதுகாப்பிற்காக ரூ.2 … Read more

ஐ.பி.எல் மெகா ஏலம் முதல் நாள் நிறைவு..!

மும்பை, 15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. அதற்கான மெகா ஏலம் மதியம் 12 மணிக்கு இன்று தொடங்கியது.  இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் … Read more

சீனாவில் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.  … Read more

ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது; அசாம் முதல்-மந்திரி பேச்சு

கவுகாத்தி, 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன் தினம் உத்தரகாண்ட்டில் பிரசாரம் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் அணி தன்னுடைய 7-வது … Read more

ஜப்பான்: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 5 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு

டோக்கியோ, ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதிலும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் சில … Read more

பிப்.14 முதல் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் – பீகார் அரசு அறிவிப்பு

பாட்னா, பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் பீகாரில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அம்மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 1,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பீகாரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 14-ம் தேதி முதல் பீகாரில் அமலில் உள்ள அனைத்து விதமான கொரோனா … Read more

ஐபிஎல் ஏலத்தில் ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

பெங்களூரு,  15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.  அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்பட 8 நாடுகளின் பயணிகள் விமானத்திற்கு ஹாங்காங் அரசு தடை

ஹாங்காங், ஹாங்காங் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் … Read more