மே.வங்காளத்தில் நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது; குஜராத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம்  பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக சொந்த ஊரான போக்டுய் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.  ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்காள … Read more

சூடுபிடிக்கும் ஐபிஎல் …! தொடக்க போட்டியில் இருந்து அடுத்தடுத்து விலகும் சென்னை அணி வீரர்கள் ?

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க போட்டியிலிருந்து தீபக் சஹார் விலகியுள்ளது அணிக்கு பெரும்பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது முதல் போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர்  மொயீன் அலி விளையாடுவது கேள்வி குறியாகியுள்ளது. தற்போது இங்கிலாந்தில் உள்ள மொயீன் அலி, இந்தியாவுக்கு வருவதற்கான … Read more

இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன் தவறாக செலவழிப்பு – இலங்கை அரசு மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுவதால் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் பெட்ரோல், டீசலை வாங்கும் அவல நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில், இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் … Read more

கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை; 2-வது மனைவி உள்பட 3 பேர் கைது….!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே பவானிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜூ மல்லப்பா (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் 3 பெண்களை திருமணம் செய்து இருந்தார். முதல் மனைவியும், அவரது 2 பிள்ளைகளும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். 2-வது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த 2 குழந்தைகளுடன் ராஜூ வசித்து வந்தார். 3-வது மனைவி கர்ப்பமாக உள்ளார்.  இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ராஜூ தனது காரில் பவானிநகர் பகுதியில் சென்றார். … Read more

ஐ.பி.எல் போட்டியை நேரில் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன இந்த ஆண்டு லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில், மும்பையின் வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே ஸ்டேடியம் ஆகியவற்றில் 74 போட்டிகள் … Read more

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

பீஜிங், சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த யாரும் இதன் பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more

அப்படி மட்டும் நடந்தால் அரசியலில் இருந்தே ஆம் ஆத்மி வெளியேறும்: பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்

புதுடெல்லி, டெல்லி மாநகராட்சி தேர்தலை பாஜக சரியான நேரத்தில் நடத்தி வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி அரசியலிலிருந்து விலகும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- டெல்லியில் மாநகராட்சி தேர்தலைச் சரியாக நடத்தி பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறுவோம். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பாஜக கூறுகிறது, ஆனால், சிறிய கட்சி மற்றும் சிறிய தேர்தலுக்கு பயப்படுகிறது.  சரியான … Read more

ஓய்வு முடிவை அறிவித்த உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை

சிட்னி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த ஆஷ்லி பார்ட்டி, தனது 25-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனக்கு தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், ஆனால் உலகம் முழுவதும் சுற்றி தனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்து இருக்க தன்னால் முடியாது என்றும் … Read more

பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு சென்ற மாணவிகளை சில மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பிய தலீபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன . ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் … Read more

விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் 9 நாட்களில் 40 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதியை எட்டி சாதனை! – மந்திரி பியூஷ் கோயல்

புதுடெல்லி, 2021-22ம் ஆண்டு காலகட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விவசாய பொருட்கள் ஏற்றுமதியை இந்தியா செய்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.அதில், அரிசி (பாசுமதி தவிர), கடல் பொருட்கள், கோதுமை, மசாலா மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட சுமார் 50% அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. Highest ever Agri products export in 2021-22, driven by commodities like rice (other than basmati), … Read more