ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும்: முன்னாள் ரஷிய அதிபர்

மாஸ்கோ, ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று முன்னாள் ரஷிய  அதிபர் தெரிவித்தார்.  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால், ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் பரந்த அளவிலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் ரஷிய  அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்தார். ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை தாக்கி வசைபாடினார். டெலிகிராம் சேனல் வாயிலாக … Read more

கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் சாவு

சான் ஜுவான், அகதிகள் தஞ்சம் கரீபியன் தீவுநாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன் முறையும், மறுபுறம் வறுமையும் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் செய்து அமெரிக்காவை அடைகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்துவிடுகிறது. கடலில் கவிழ்ந்தது இந்த நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி,  அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார். அவருக்கு வயது 74.  ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு … Read more

ஐபிஎல் : ரபாடா அபார பந்துவீச்சு : பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று நடைபெற்ற  60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதின.   இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ,ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் .வந்த வேகத்தில் தொடக்கத்தில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார் .பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினார் .ஜோஸ் ஹேசில்வுட் … Read more

"மே மாதத்தின் மையத்தில் கடும் வெப்ப அலை வீசும்!" பாகிஸ்தான் வானிலை மையம் எச்சரிக்கை!

காராச்சி, பாகிஸ்தானில் மே மாதத்தின் மத்தியும் கடுமையான வெப்ப அலை வீசும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெப்பநிலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து மாகாணங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  சராசரி வெப்பநிலை 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து கடுமையான … Read more

ஜம்முவில் பேருந்து தீ பிடித்து விபத்து; 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

ஜம்மு, ஜம்முவில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சுமார் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து கத்ரா என்ற இடம் அருகே சென்ற போது  எதிர்பாராத விதமாக தீ பிடித்தது.  இந்த கோர விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  20- பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வைஷ்ணோதேவி கோவிலுக்குச் செல்லும் புனித பயணிகளுக்கு கீழ் தளமாக கத்ரா … Read more

ஐபிஎல் : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தடுமாற்றம்

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன.   இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ,ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் .வந்த வேகத்தில் தொடக்கத்தில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார் .பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினார் .ஜோஸ் ஹேசில்வுட் … Read more

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி … Read more

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி; சோட்டா சகீல் கூட்டாளிகள் 2 பேர் கைது

மும்பை, பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடந்த பிப்ரவரி மாதம் என்.ஐ.ஏ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் நாட்டில் பயங்கரவாதத்தை பரப்புவதாகவும், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தாவூத் இப்ராகிம் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ. மும்பை, தானேயில் தாவூத் இப்ராகிம் தொடர்பான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் சோட்டா … Read more

ஐபிஎல் : விராட் கோலி புதிய சாதனை

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்தது .இதனை தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது . இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் எடுத்தார் .இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்களை அவர் கடந்துள்ளார் .இதனால் ஐபிஎல் … Read more