இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து..!

கொழும்பு, இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில்  கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்துக்கு அடிபணிந்த  மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அறிவித்திருந்தார். தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை … Read more

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்த சில்லறை வணிக பணவீக்கம்..!

புதுடெல்லி, எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் சில்லறை வணிக பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் அதிகபட்சமாக 8.33 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ஏப்ரல் 2022-ல் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் கடுமையாக … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ், சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!

இத்தாலி, இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி கால்இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு 3-வது சுற்று போட்டி ஒன்றில், கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார். … Read more

போரால் உருக்குலைந்த மரியுபோல்… உதவிக்கரம் நீட்டும் ரஷியா!

மரியுபோல், உக்ரைனின் மரியுபோல் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். அசோவ்ஸ்டல் இரும்பாலையைத் தவிர மொத்த மரியுபோலும் ரஷியா வசமான நிலையில், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.  ரஷியாவின் அவசரகால பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றியும், உள்ளூர் மக்களுக்காக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியும் உதவி செய்து வருகின்றனர். மரியுபோலில் போருக்கு முன்னர் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வந்த நிலையில், தற்போது அது ஒன்றரை லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பங்குச் சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பை, தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி … Read more

பிரேசில் ஒலிம்பிக் போட்டி – 2 தங்கம் வென்று மதுரை மாணவி அசத்தல்

பிரேசிலில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நடந்த பேட்மிண்டன்  போட்டியில் மதுரையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகாவும், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் மோதினர். விறுவிறுப்பான இந்த போட்டியில் 21-17, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில்  வெற்றி பெற்று ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார் . இதனை தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில்  மலேசியா நாட்டை சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை எதிர்த்து ராஜஸ்தானை … Read more

அதிபருக்கு எதிராக இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானம் – எதிர்க்கட்சிகள் முடிவு

கொழும்பு, அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களால், தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்தனர்.  இந்த கூட்டத்தில், அதிபருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதால், அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவநம்பிக்கையை வெளிப்படுத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி வரும் 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் … Read more

2 ஃபேன், 2 பல்புக்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் – அரியானாவில் பெயிண்டருக்கு வந்த சோதனை..!

ஃபதேஹாபாத், அரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்த, பெயிண்டர் தொழில் செய்யும் ஒருவருக்கு, ரூ. 2.5 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு வெறும் 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் பிரேம் குமார் என்ற அந்த நபர், ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணமாக ரூ.2.5 லட்சம் விதிக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார். மேலும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பிரேம் குமாரின் குடும்பத்தினர் 2 மின்விசிறிகள் மற்றும் 2 பல்புகள் மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசிக்கின்றனர். … Read more

ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தடுமாற்றம்

மும்பை,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் .தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மொயீன் … Read more

இலங்கையில் புதிய அமைச்சரவை? தமிழர்களுக்கு வாய்ப்பு?

கொழும்பு, இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்று புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை அமைச்சரவை நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே, ராஜபக்சே  இருக்கும் ஆட்சியில் எந்த பதவியும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், தமிழ், இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க ரணில் விக்கிரமசிங்கே … Read more