உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை

பெங்களூரு, தனது அபார பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அஸ்வின், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.  அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட் மற்றும் நடப்பு தொடரில் 7 டெஸ்டில் 29 விக்கெட் என மொத்தம் 21 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த மிகப்பெரிய மைல்கல்லை … Read more

வேகமாக பரவும் ஒமைக்ரான்: முன் எப்போதும் இல்லாத அளவில் சீனாவில் கடும் நெருக்கடி..!!

பெய்ஜிங்,  சீனாவின் உகான் மாகாணத்தில்  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.  சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நாட்டில் உள்ள 19 மாகாணங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் – திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

புதுடெல்லி, மக்களவையில் இன்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரெயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது”என்றார். 

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: கேரளா பிளாஸ்டர்ஸ்-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை

பனாஜி, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  கோவாவில் … Read more

பெற்ற தாயை 3-வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம்! அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில், கடந்த சனிக்கிழமை மாலை நடந்த விபத்தில் பெற்ற தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, டீஜா பென்னட்(22 வயது) என்ற பெண்மணி, ஷாப்பிங் முடித்துவிட்டு தனது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட தயாராகி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவன், காரின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் … Read more

தூத்துக்குடி-பெங்களூரு இடையே மார்ச் 27 முதல் தினசரி விமான சேவை

தூத்துக்குடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராக உள்ள நிலையில், அதனை ரூ.380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி-பெங்களூரு இடையே வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தூத்துக்குடி-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஓராண்டுக்குள் … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி

வெலிங்டன்,  மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. அணியின் கேப்டன் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

சீனாவிடம் டிரோன்களை கேட்கும் ரஷியா! ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைன் மீது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த சீனாவிடம் டிரோன்களை ரஷியா கேட்டுள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பைடன் அரசுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீனாவின் உயர்மட்ட ஆலோசகரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான யாங் ஜியேச்சி ஆகியோர் நேற்று ரோமில் சந்தித்து பேசினர். … Read more

கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷிய படைகள் தாக்குதல்

கீவ், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. போரை உடனடியாக நிறுத்தி விட்டு தூதரக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என உலக நாடுகள் கூறுவதை தனது காதில் போட்டுக்கொள்ளாத ரஷியா படையெடுப்பின் வேகத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு, பகல் பாராமல் ரஷிய படைகள் நடத்தி வரும் தொடர் குண்டு வீச்சுகளால் … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு 132 ரன்கள் இலக்கு

வெலிங்டன், மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 14 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. அணியின் கேப்டன் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற,  இறுதியில் வெஸ்ட் … Read more