பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்காவின் கருத்து என்ன..?

வாஷிங்டன்,  கடந்த 9-ந் தேதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது.  பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது. ஆனால் பாகிஸ்தான் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை விழுந்தது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது,  நாங்கள் கேள்விப்பட்ட வரையில் … Read more

ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை!

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றன. முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியதும், மாநிலங்களவை உறுப்பினர்களான நபின் சந்திரா பராகொஹைன், ராகுல் பஜாஜ், பேராசிரியர் டிபி சட்டோபாத்யாயா மற்றும் யட்லாபடி வெங்கட் ராவ் ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் கூட்டத்தொடர் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேசிய மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு, ஹோலி பண்டிகையையொட்டி, … Read more

அஸ்வினிடம் எப்பொழுது பந்தை கொடுத்தாலும் வெற்றிகரமாக வீசுகிறார்: ரோகித் சர்மா

பெங்களூரு, இந்தியா- இலங்கை அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த நிலையில், அணியின் வெற்றி குறித்தும், வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்தும் கோப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதை தனிப்பட்ட முறையிலும், அணியாகவும் அனுபவித்து வருகிறேன். ஒரு அணியாக சில விஷயங்களை … Read more

மாலத்தீவுக்கு தாராளமாக உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு நன்றி! – மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு, மாலத்தீவுக்கு பல உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு  மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா பல சந்தர்ப்பங்களில் தாராளமாக மாலத்தீவுக்கு உதவி செய்தது. இந்தியா அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்கியது. எங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 25 கோடி டாலர் மதிப்பிலான நிதிப் பத்திரங்களை இந்தியா வாங்கியுள்ளது. மாலத்தீவில் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தேவையான பல உபகரணங்களை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளோம். அதே … Read more

மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? – மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி

புதுடெல்லி உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலையிலேயே திமுக மக்களவை எம்.பி டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். அவை தொடங்கியவுடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில், “உக்ரைனிலிருந்து … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் லக்‌ஷயா சென் தோல்வி..!

முல்கேம் அன்டெர் ரூ, ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மற்றும் குன்லாவுட் விடிட்சர்ன் (தாய்லாந்து) மோதினர். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 18-21, 15-21 என்ற நேர் செட்டில் குன்லாவுட் விடிட்சர்னிடம் தோற்று கோப்பையை தவறவிட்டார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. முன்னதாக லக்‌ஷயா சென் … Read more

கனடா சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலி: வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்

புதுடெல்லி, கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், … Read more

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை அளித்த மாநிலம்..!!

போபால்,  விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.  நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.  இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி … Read more

விராட் கோலியுடன் ‘செல்பி’: மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

பெங்களூரு, இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது, ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி  நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து … Read more

கீவ் புறநகர் பகுதிகளில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்

லிவிவ், உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன. உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் … Read more