இலங்கையை விட்டு மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் – நமல் ராஜபக்சே

கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சே தற்போது தங்கியிருக்கும் திரிகோணமலை கடற்படை தளத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நமல் ராஜபக்சே,  இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலகமாட்டார். புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய … Read more

அசாம்: அரசு செய்தித்தாள் முதல் பதிப்பினை வெளியிட்டார் மந்திரி அமித்ஷா

கவுகாத்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடந்த 8ந்தேதி கவுகாத்தி விமான நிலையத்தில் வரவேற்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா அரசின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுவார்.  இதேபோன்று, கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்று அசாம் காவல் துறைக்கு அமித்ஷா விருது வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. … Read more

"விராட் கோலி தனது திறமை மீதே சந்தேகம் கொள்கிறார்"- முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில்  216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும். தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் அணியின் … Read more

ஜப்பான்: பள்ளியில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்கு அனுமதி

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் யமனாஷி மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன் 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.  இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி வெளியான செய்தியில், கைகளை கழுவ வைத்திருக்கும் சேனிடைசரை பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதனை … Read more

ஒலி அளவை குறைக்காவிட்டால் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும்; கர்நடக முதல் மந்திரி உத்தரவு

பெங்களூரு,  கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒலி அளவை குறைக்காவிட்டால் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் உள்ளதோ அவற்றை அகற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். ஒலி மாசு விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய பசவராஜ் பொம்மை, “சுப்ரீம் ஒலி மாசு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் மசூதிகள் உள்பட … Read more

தாமஸ் கோப்பை போட்டி; இந்திய பேட்மிண்டன் குழு காலிறுதிக்கு தகுதி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது. முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை எதிர்கொண்டார்.  இந்த போட்டியில் முதல் செட்டை 22-20 என யாங் வெற்றி பெற்றார்.  எனினும், அடுத்தடுத்து திறமையாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11 மற்றும் 21-15 … Read more

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – அடுத்து நடக்க போவது என்ன?

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த  … Read more

ராணுவ வீரர் விடை பெற்ற பின் கதவுக்கு பின்னால் கண்கலங்கும் தாயார்; வைரலான புகைப்படம்

புதுடெல்லி, அன்னையரின் அன்பு, தியாகம் செய்வதற்கான திறன் ஆகியவற்றுக்கு எல்லையே கிடையாது.  இதனை பல தருணங்களில் பலரும் உணர்ந்திருக்க கூடும்.  இதுபற்றிய புகைப்படம் ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில், ராணுவத்தில் பணியாற்றும் தனது மகன், வீட்டில் இருந்து புறப்பட்டு பணிக்கு செல்ல தயாராகிறார். அவரை வழியனுப்பி வைக்க வாசல் வரை வந்த அவரது தாயார், வீரர் வெளியே … Read more

"டெவன் கான்வே-வை முன்பே களமிறக்காமல் இருந்ததற்கு அவர்கள் வருந்துவார்கள்"- முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை தொடக்க வீரர் டெவன் கான்வே அதிரடியால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக  3-வது முறை அரைசதம் அடித்து … Read more

லைவ் அப்டேட்ஸ்; இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு: ஆளும் கட்சி எம்.பி சடலமாக மீட்பு, மேயர் வீட்டிற்கு தீ வைப்பு

கொழும்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கம்புகளால் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழலில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அது தொடர்பான அண்மைச் செய்திகளை கீழ் காணலாம்.  மே 09,  9.00  PM குருங்கலாவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். … Read more