உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சம் அகதிகள் வெளியேற்றம்..!

ஜெனீவா, உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அந்த நாட்டையே புரட்டி போட்டு விட்டது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிற, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், பிப்ரவரி 24ல் தொடங்கப்பட்ட ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு  இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என்று … Read more

ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்த 15 தொழிலாளர்கள் பலி..!

திருப்பதி, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்கரெட்டிகுடம் நகரில் கடந்த 2 நாட்களாக கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் 25-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு … Read more

பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

புவனேஸ்வர், 9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய பெண்கள் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி அடுத்து 4-ம் நிலை அணியான ஜெர்மனியுடன் 2 … Read more

போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக கொல்லப்படுவோம் – ரஷிய வீரர்கள் அச்சம்

கீவ், உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்து 16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், போருக்கு பின்னர் ரஷியா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷிய வீரர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஒரு ரஷிய இராணுவ வீரர்,போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக போருக்கு … Read more

ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தை..!

மும்பை, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில நாள்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்தியாவில் பங்கு சந்தை புள்ளிகள் அதிகரித்து ஏற்றத்துடன் வர்த்தமாகி வருகிறது. அதன்படி, மும்பை பங்கு சந்தையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.23 புள்ளிகள் உயர்ந்து 55,665.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  மேலும் தேசிய … Read more

சி.கே.நாயுடு கோப்பை: தமிழக அணி அறிவிப்பு

சென்னை, சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி (25 வயதுக்கு உட்பட்டோர்) வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக லோகேஷ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணி வருமாறு:- லோகேஷ்வர் (கேப்டன்), ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் (துணை கேப்டன்), கணேஷ் (விக்கெட் கீப்பர்), கவுரி சங்கர், அரவிந்த், பூபதி வைஷ்ணகுமார், விமல்குமார், சுபாங் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன், சோனு யாதவ், ராகுல், நிகிலேஷ் திரிலோக் நாக், அஜித் ராம், மோகன் பிரசாத், மனவ் பிராக், ஹரிஷ், … Read more

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷியாவின் பிரமாண்ட படை…!

கீவ், உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது. இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ … Read more

'கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு நன்றி' – அகிலேஷ் யாதவ்

லக்னோ,  உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.  கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் மொத்தம் 111 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடம் பிடித்துள்ளது. மேலும் 32.06 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் … Read more

உலக கோப்பையில் மிதாலி ராஜ் புதிய சாதனை…!

ஹாமில்டன், மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்களை எடுத்தது. அமெலியா கெர் 50 ரன்னும், எமி சாட்டர்வெய்ட் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு … Read more

ஒரு போதும் போரை விரும்பியதில்லை – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

வாஷிங்டன், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதனிடையே துறைமுக நகரான மரியுபோலில் பிரசவ … Read more