உலகின் உயரமான பெண் படைத்த மேலும் 3 கின்னஸ் சாதனை..!!

அங்காரா, உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்கனவே பெற்று இருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (24). இவர் 215.16 செண்டிமீட்டர் ( 7 அடி 7 அங்குலம்) உயரம் உடையவர். 1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்டவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை இவர் பெற்றார். இந்த நிலையில் இவர் … Read more

ஐதராபாத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை

ஐதராபாத், நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்திலும் மிகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது.  தலைநகர் ஐதராபாத்திலும் வெப்பம் மிக அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென கனமழை கொட்டியது.  பலத்த காற்று மற்றும் மின்னலுடன் பெய்த மழையால் ஐதராபாத்தில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.  இதனால், தெருக்களில் சிறுவர்கள் ரப்பர் … Read more

20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை : இந்திய அணியின் நிலை என்ன ?

துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான  அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் ( 270 ரேட்டிங் ) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இதன் காரணத்தால் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இங்கிலாந்து அணியும், … Read more

"புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம்" – கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:- பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளை கையாண்டு அரசியல் பிளவுகளில் இருந்து விலகி செல்ல வேண்டியது … Read more

தேர்தல் தொடர்பாக பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் மே-20ம் தேதி தொடக்கம்; பிரதமர் மோடி பங்கேற்பு!

புதுடெல்லி,  பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மே-20,21 ஆகிய தேதிகளில்  நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசுவார் என தெரிகிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் நடைபெறவிருக்கின்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வெற்றி குறித்த வியூகம் வகுப்பதுடன், கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.  அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளபோதிலும், தொடர்ந்து … Read more

மாட்ரிட் ஓபன் : நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!!

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 , 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தரவரசையில் 78-வாத்து இடத்தில் இருக்கும் … Read more

ஜெர்மனியில் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரல்..!!

பெர்லின்,  கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்து … Read more

விருந்து நிகழ்ச்சியில் ராகுல் காந்தி: வீடியோ வைரலான நிலையில் காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியில்  ராகுல் காந்தி நிற்பதும் அவரை சுற்றியுள்ளவர்கள்  மது அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது.  காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில், தான் ராகுல் காந்தி நைட் … Read more

"அவரை ஏன் முன்பே களமிறக்கவில்லை ? " – ராஜஸ்தான் அணி மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி..!!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் … Read more

மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை நீக்க இன்றே கடைசி நாள்: எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே – தயார் நிலையில் போலீசார்!

மும்பை, மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  நடந்த பேரணியில் பேசிய எம்என்எஸ் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, மே 3(இன்றுடன்) மசூதிகளில் மாட்டியிருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதன்பின்னர் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. அந்த  சம்பவங்களுக்கு நான் பொறுப்பாக மாட்டேன், ஒலிபெருக்கி சத்தம் ஒரு மதப் பிரச்சினை அல்ல, சமூகப் பிரச்சினை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், ராஜ் தாக்கரேவின் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், மராட்டிய மாநில டிஜிபி … Read more