ஐபிஎல் போட்டியின் 5 வருட சம்பளத்தை கொண்டு பிரித்வி ஷா செய்த காரியம்- ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் 4 வெற்றிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் தொடக்க வீரராக கடந்த 5 வருடங்களாக சிறப்பாக செய்லபட்டு வருபவர் பிரித்வி ஷா. இவர் மும்பை பாந்த்ராவில்  உள்ள சொகுசு அப்பார்ட்மண்டில் ரூ. 10.5 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக … Read more

அடக்கம் செய்ய சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு…!

லிமா, பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. 36 வயதான ரோசா கடந்த 26-ம் தேதி காரில் உறவினர்களுடன் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த ரோசா மற்றும் அவரது உறவினரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரோசா, அவரது உறவினர் என இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரோசாவை அடக்கம் செய்வதற்கான வேலைகளை அவரது உறவினர்கள் செய்தனர். … Read more

ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி – மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம்

புதுடெல்லி, நாடு முழுவதும் மின்சார தட்டுபாடு ஏற்பட்டு, பல மாநிலங்களில் 2 முதல் 8 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் காரணமாகவே, மின்சார பற்றாக்குறை நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து: 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கேரளா அணி

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன. 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.  … Read more

ஜெர்மனி பயணத்தை முடித்து டென்மார்க் புறப்பட்டார் பிரதமர் மோடி

பெர்லின், இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சென்றார். ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்ற பிரதமர் மோடிக்கு ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது இருநாட்டு உ … Read more

இந்தி தேசிய மொழி அல்ல; மக்கள் எந்த மொழியை பேச விரும்புகிறார்களோ அதை பேச விடுங்கள் – பாடகர் சோனு நிகம்

புதுடெல்லி, இந்தி நமது தேசிய மொழி அல்ல என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னட நடிகர் சுதீப் சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய இந்தி நடிகர் அஜய் தேவ்கன், “தென்னிந்திய மொழிகளில் உள்ள படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுவது ஏன்” என்று கேள்வி எழுப்பினார். இந்த விவாதம் பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.  இந்தி மொழி திணிப்பு என்பது சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், … Read more

ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் காயம்

புனே,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கை பெருவிரலுக்கும், அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 லீக் ஆட்டங்களை தவற விட்டு அணிக்கு திரும்பினார். இந்த நிலையில் புனேயில் நேற்று முன்தினம் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் மீண்டும் அவருக்கு அதே கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் … Read more

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்; ஜோ பைடன்

வாஷிங்டன்,  உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில் ரம்ஜான் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர் ஜோபைடன் கூறியதாவது:-   இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லோராலும் இதை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.  பல்வேறு நாடுகளிலும் நிலவும் வறுமை, வன்முறை, நோய் பரவல் காரணமா இந்த நிலை … Read more

கடும் வெப்பம், அனல் காற்று: மாநிலங்களுடன் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் இன்று அவசர ஆலோசனை

புதுடெல்லி, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வடமாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக அனல் காற்று வீசி வருகிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், டெல்லி, மத்தியபிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களை வெப்பம் வாட்டி வதைக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.  வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் ஏப்ரல் … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஓவரில் முகேசிடம் தோனி கூறியது என்ன…?

புனே, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.  இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 202 ரன்கள் எடுத்திருந்தது. 203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணி முதல் 4 ஓவரில் அதிரடியாக 46 ரன்கள் சேர்த்தது.  அபிசேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி பவர்பிளேயில் பந்துகளை பவுண்டரிக்கு விளாசி தள்ளியது. எனினும் 6வது ஓவரில் இந்த … Read more