பெரிய பாம்புகளை தோளில் சுமந்து நடனம் ஆடிய வாலிபர்

ஜகர்த்தா, உலகிலேயே மிக பெரிய பாம்புகளாக கூறப்படும் பைத்தான் இன பாம்புகள் 20 அடிக்கும் கூடுதலாக வளர கூடியவை.  இவை விஷமற்றவை.  ஆனால், தனது எடையை விட பெரிய எடை கொண்ட விலங்குகளையும் இரையாக்க கூடிய திறன் படைத்தவை.  சில சமயங்களில் மனிதர்களையும் விழுங்கி விடும். ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதிகள், இந்தியா, நேபாளம், வங்காள தேசம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, தென்கிழக்கு பாகிஸ்தான், தெற்கு சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த வகை பாம்புகள் … Read more

வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை கண்டித்ததால் மனைவியை கொலை செய்த நபர்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சோஹன்லால். இவருக்கு திருமணமாகி 33 வயதில் மனைவி உள்ளார். இதற்கிடையில், சோஹன்லாலுக்கு அதேபகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தொடர்பாக சோஹன்லாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சொஹன்லால் அவரது மனைவியை … Read more

அனைத்தையும் ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட முடியாது: ஜடேஜா குறித்து டோனி கருத்து

மும்பை, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடரின் துவக்கத்தில் இருந்து கடும் தடுமாற்றம் கண்டது.  முதல் 8 போட்டிகளில் 6-ல் தோல்வி, 2-ல் மட்டுமே வெற்றி அடைந்தது.  சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நிலையில், திடீரெனெ  ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், மீண்டும் கேப்டனாகும் சூழல், டோனிக்கு ஏற்பட்டது. நேற்று  ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி … Read more

கொரோனா தொற்று எதிரொலி: சீனாவில் பொது முடக்கம், கட்டுப்பாடுகளால் மக்கள் கடும் அவதி

பீஜிங், உலகுக்கு கொரோனாவை வாரி வழங்கிய சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தத்தளிக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் அங்கு புதிதாக 7,872 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. ஷாங்காய்க்கு வெளியே சீனாவின் பிரதான பகுதிகளில் 384 பேருக்கு தொற்று … Read more

மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு – அதிர்ச்சி சம்பவம்

போபால், மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் சந்திபுரா கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா அகிர்வார். 70 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்ய கொண்டு வந்தனர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் கண்ணையாவின் உடலை ஊர் சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். கண்ணையா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை சுடுகாட்டில் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: தோல்விப்பயணத்துக்கு முடிவுகட்டுமா கொல்கத்தா..?

மும்பை,  முதல் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று இந்த சீசனை சூப்பராக தொடங்கிய கொல்கத்தா அணி அதன்பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்று பின்தங்கி நிற்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும்.  அதனால் ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. கொல்கத்தா அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் சரியான ஆடும் … Read more

இலங்கையில் புது அரசு அமைப்போம்; முன்னாள் அதிபர் பரபரப்பு பேச்சு

கொழும்பு, இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில், முன்னாள் அதிபர் மற்றும் இலங்கை விடுதலை கட்சியின் தலைவரான மைத்ரிபால சிறிசேனா தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொலன்னருவா பகுதியில் பேரணி ஒன்றை நடத்தினார். இதில் அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, நாட்டில் பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை மற்றும் அரசு ஊழியர்களும் தெருக்களில் இறங்கி அரசை வீட்டுக்கு போகும்படி வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காரணத்திற்காகவே, நானும் இந்த தொழிலாளர் தினத்தில் தெருவில் இறங்கியுள்ளேன்.  … Read more

டெல்லி, வடமேற்கு இந்தியாவில் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலையாக 40.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது டெல்லியில் கடந்த  72 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். மேலும், வெப்ப அலை வீசியதால், மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது.  இந்த நிலையில், டெல்லியில் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நாளை முதல் … Read more

"அவருக்கு தேவை அன்பும், கவனமும் தான்" – டெல்லி வீரர் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்..!!

மும்பை, கடந்து 3 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் குல்தீப் யாதவ். கொல்கத்தா அணிக்காக இதற்கு முன் விளையாடி வந்த அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரேன் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட தொடங்கிய பின் ஓரம் கட்டப்பட்ட இவர் கடந்த சீசனில் காயம் காரணமாக விலகினார். பின்னர் இந்த சீசனில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். … Read more

நியூசிலாந்தில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு உறுதி

வெல்லிங்டன், சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.  உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 9 லட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்து நாட்டில் … Read more