மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: படோசாவை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார் ஹாலெப்..!

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், உலகின் நம்பர் 2 வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார். 1 மணி 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

"மரியுபோல் வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" – கீவ் வாசிகள் போராட்டம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் வீரர்கள் துளியும் அஞ்சாமல் ரஷியாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர்.  தங்கள் உறவுகள் மரியுபோலில் … Read more

ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் அரசு முறைப்பயணம்

புதுடெல்லி, பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர், பிறகு அங்கிருந்து டென்மார்க் செல்கிறார். டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக அவர் பாரீஸ் வருகிறார். 2-ம் தேதி இரவு ஜெர்மனியிலும் 3-ம் தேதி இரவு … Read more

ரோகித் சர்மாவின் குணங்களை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தி வருகிறார்- சுனில் கவாஸ்கர்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அறிமுக அணியான குஜராத் அணி நடப்பு தொடரில் 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அசத்தும் குஜராத் அணி 16 புள்ளிகளுடன் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: நீண்ட காலத்திற்கு கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த விரும்பும் ரஷியா..!!

கீவ்,  உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மே 01,  12.05 p.m நீண்ட காலத்திற்கு உக்ரைனின் கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த ரஷியா விரும்புகிறது: இங்கிலாந்து மாஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. புதிய அரசாங்கம் உக்ரைன் … Read more

சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் விலை கண்காணிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி, இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசிய அரசு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அதன் விலை உன்னிப்பாக … Read more

"கேப்டன்சி தனக்கானது இல்லை என ஜடேஜா உணர்ந்துவிட்டார்" – பிரபல வீரர் கருத்து..!!

மும்பை, 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை  கோப்பையை வென்றுள்ளது.   அதற்கு முக்கிய காரணமாக கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி இந்த முறை போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் அது சென்னை அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதுவரை ஆடிய 8 … Read more

எகிப்தில் கால்வாயில் ரிக்சா கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

கெய்ரோ, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே பெஹைரா மாகாணத்தில் உள்ள நகரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை ஏற்றி கொண்டு ரிக்ஷா ஒன்று அவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரிக்சா வண்டி அந்நாட்டின் நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கால்வாய் வழியே செல்லும்போது, திடீரென அதில் கவிழ்ந்தது. இதில் ரிக்சாவில் பயணித்த 12 பேரில் 8 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  மீதம் இருந்த 4 பேர் உயிர் தப்பியுள்ளனர். ரிக்சாவை ஓட்டி … Read more

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்..!! – பிரதமர் மோடி உரை

புதுடெல்லி,  முதல்-மந்திரிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இம்மாநாடு நடந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்-மந்திரிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.   … Read more

ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தது. இதன்படி, குஜராத் அணி முதலில் பந்து வீசுகிறது.  நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா … Read more