உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்…!

கெய்ரோ, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.  முன்னதாக நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஜெர்மனி மோதின. அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் … Read more

மஸ்கட்டில், புதிதாக மெட்ரோ ரெயில் சேவை: இம்மாத இறுதியில் ஆய்வு பணிகள்

மஸக்ட்,  ஓமன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்ட இயக்குனர் இப்ராகிம் பின் ஹமூத் அல் வைலி கூறியதாவது:- நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்து சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மஸ்கட் நகரில் புதிதாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான திட்டப்பணியை மேற்கொள்ளும் பொருட்டு இந்த மாத இறுதியில் மஸ்கட் நகரில் ஆய்வு பணி நடக்க இருக்கிறது. மொத்தம் 12 … Read more

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…!

லக்னோ, 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.  இந்நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 58 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த இறுதிகட்ட தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 3 வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 271/2

ராவல்பிண்டி, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து இருந்த … Read more

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவை கண்டித்து கஜகஸ்தானில் போராட்டம்

கஜகஸ்தான், உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா போரை நிறுத்தவில்லை. இதனால், பல நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத்தடைகள் விதித்து வருகின்றன. மேலும் ரஷியாவிற்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் கொடூர தாக்குதலை கண்டித்து கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் சோவியத் ஒன்றிய நிறுவனர் விளாடிமிர் லெனின் சிலை முன்பு … Read more

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு: முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் கைது..!

புதுடெல்லி, தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், … Read more

ஜடேஜா டிக்ளேர் முடிவை அறிவிக்க விரும்பியது பாராட்டுக்குரியது; கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

 மொகாலி, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 65 ஓவர்களில் … Read more

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்ப்பு

கீவ், உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷிய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷிய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட … Read more

மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு மொட்டை அடித்து, கைகளை பின்னால் கட்டி நடக்க வைத்து ‘ராக்கிங்’?

நைனிடால்,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், 27 முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலை குனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெண்ணிற லேப் கோட்டுடன், முக கவசம் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சீனியர் மாணவர்களால் ‘ராக்கிங்’ செய்யப்பட்டு இவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார்கள். … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் – கோவா ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அரைஇறுதிக்கு … Read more