தெலுங்கானா: கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

யாதத்ரி, தெலுங்கானாவின் யாதத்ரி-போங்கீர் மாவட்டத்தில் பழைய கட்டிடத்தின் மேற்கூரை பகுதிக்கு கீழே 4 பேர் நின்று கொண்டு இருந்துள்ளனர்.  இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு வசிக்கும் ஒருவர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு விவரம் தெரிவித்து உள்ளனர்.  அவர்கள் உதவியுடன் போலீசார் மீட்பு பணிகளை விரைந்து முடித்துள்ளனர்.  காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்கு கொண்டு … Read more

இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிப்பு

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் ஜூன் 7-ந் தேதியும், 2-வது ஆட்டம் கொழும்பில் ஜூன் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கண்டியில் ஜூன் 11-ந் தேதியும் நடக்கிறது.  முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் … Read more

டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்ற எலான் மஸ்க்..!!

டெட்ராயிட்,  உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) ஆகும். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் … Read more

தினசரி கொரோனா பாதிப்பு 3,377 ஆக உயர்வு: 60 பேர் தொற்றால் பலி

புதுடெல்லி, தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்கிறது.  நேற்று முன் தினம் 2,927  நேற்று 3,303 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 3,377 ஆக அதிகரித்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,68,799 லிருந்து 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,28,128 லிருந்து 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் 17,801 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.  நாடு … Read more

ஐ.பி.எல் கிரிக்கெட்: லக்னோவை சமாளிக்குமா பஞ்சாப்? – இன்று மோதல்

புனே, பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். அந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் 88 ரன்கள் அடித்தார்.  அதேசமயம் நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் மயங்க் அகர்வால் மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வலுவான தொடக்கம் கிடைக்க அவர் … Read more

ஐ.நா. தலைவர் வருகையின்போது ஏவுகணை தாக்குதல்; அதிர்ச்சி அளித்த ரஷியா

கீவ், உக்ரைன் மீது ரஷியா 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடுத்து போரில் ஈடுபட்டு வருகிறது.  இதனால், லட்சக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கையாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.  சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டு கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது.  போரை ரஷியா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த … Read more

காதலிக்கு வேறு நபருடன் திருமணம்: ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்…!

மதுரா, உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் நௌஜீல் பகுதியில் இன்று வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்தது. இது பற்றி அறிந்து அந்த இளைஞர் கடும் மன உளைச்சலிலிருந்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது நண்பர்களிடம் காதலி பிரிந்துவிட்டதாகக் கூறி புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர், திருமண நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். … Read more

104 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மே 7-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் வருமானவரி, இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், சுங்கஇலாகா உள்பட 74 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், சங்கம் கிளப், இந்துஸ்தான் உள்பட 30 அணிகளும் கலந்து கொள்கின்றன.  இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்று முதல் மே 3-ந் தேதி … Read more

குவாட் உச்சி மாநாட்டில் ரஷியாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு பைடன் அழைப்பு? வெள்ளை மாளிகை பதில்

வாஷிங்டன், ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற மே 24ந்தேதி குவாட் உச்சி மாநாடு நடைபெறும் என ஜப்பான் அறிவித்து உள்ளது.  இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. இதனை முன்னிட்டு ரஷியாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு இந்த மாநாட்டில் பைடன் அழைப்பு விடுப்பாரா? என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது, அந்த கூட்டத்தில் இதுபற்றிய உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்துவோம்.  இந்த கூட்டம் … Read more

கர்நாடகா: தேர்வு தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..!

கர்நாடகா: கர்நாடகா மாநிலம், உடுப்பி அருகே உள்ள பைந்தூரில் வசிப்பவர் ராஜேஷ். இவர் டிஏஆர் பிரிவில் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். கர்நாடகா பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்றது. அதற்கான விடைத்தாள் திருத்தும் மையத்திற்க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ராஜேஷ் ஆதி-உடுப்பியில் உள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது ராஜேஷ் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் சிறிது காலமாக மனமுடைந்து இருந்ததாக … Read more