ஓடும் ரெயிலில் இருந்து குதித்த 3 இளம்பெண்கள்… வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை

மும்பை, மராட்டியத்தின் மும்பை பெருநகரில் பயணிகள் தங்களது அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காக புறநகர் ரெயிலை அதிகம் சார்ந்து உள்ளனர்.  இதனால், ரெயில்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், மும்பையின் ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கடந்த 16ந்தேதி பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில், ரெயில் ஒன்றில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் ஒருவரை பணியில் இருந்த ரெயில்வே பாதுகாவலர் அல்டாப் ஷேக் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றினார். அவர் பணியில் புத்திசாலித்தனத்துடனும், எச்சரிக்கையுடனும், அர்ப்பணிப்பு … Read more

ஐ.பி.எல் கிரிக்கெட்: சரிவில் இருந்து மீளுமா கொல்கத்தா? – டெல்லியுடன் இன்று மோதல்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின்செயல்பாடு (3 வெற்றி, 4 தோல்வி) தொடர்ந்து சீராக இல்லை. ஒரு ஆட்டத்தில் ஜெயித்தால் அடுத்த ஆட்டத்தில் தோற்று விடுகிறார்கள். முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சர்ச்சைக்கு மத்தியில்15 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த பிரச்சினைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் … Read more

போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கிய நாடு எது? – வெளியான தகவல்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா இன்று 64-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் … Read more

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் உயர்வு

மும்பை, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் காணப்பட்டன.  ஆசியாவின் மிக பழமையான மற்றும் உலகின் 10வது பழமையான என குறிப்பிடப்படும் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் அல்லது 0.46 சதவீதம் உயர்ந்து 57,083.07 புள்ளிகளாக உள்ளன. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82 புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் உயர்ந்து 17,120.40 புள்ளிகளாக உள்ளன.  இதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்து … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலக வேண்டும் – ரவிசாஸ்திரி வலியுறுத்தல்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில்ரன் எடுக்க முடியாமல் திணறும்பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி (9 ஆட்டத்தில் 128 ரன்) ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில்,  ‘விராட் கோலி இடைவிடாது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிக்கும்கேப்டனாக செயல்பட்டார். மனதளவில் புத்துணர்ச்சி பெற அவருக்கு ஓய்வு மிகவும் அவசியமாகும். அது தான் தற்போது … Read more

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பைடன் சந்திப்பு; வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன், ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற மே மாதம் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது.  இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. வருகிற மே 20 முதல் 24 வரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  இதனை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் குவாட் … Read more

புதுச்சேரி: வகுப்பறையில் பொருட்களை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள் – துணை சபாநாயகர் ஆய்வு…!

நெட்டப்பாக்கம், புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பிரிவில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்க முன்பு பள்ளி வகுப்பறையில் உள்ள மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றை  மாணவர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் இன்று காலை கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் துணை சபாநாயகர் ராஜவேலு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் சேதப்படுத்திய அறையை பார்வையிட்டு, … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் சாய்னா, சிந்து வெற்றி

மணிலா, ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர்ஒன்’ வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் 21-15, 17-21, 21-13 என்றசெட் கணக்கில் தென் கொரியாவின் சின் யுஜினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன் னேறினார்.  முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 27-25, 21-9 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் பாய் யு போவை விரட்டியடித்து … Read more

என் ஆசைக்கு அடிபணியாவிட்டால் 20 பேரை கூப்பிடுவேன்…! குடிபோதையில் ரஷிய வீரர் 16 வயது கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை

கீவ், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டுள்ள போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.  இதனால், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.  சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டு கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது.  இந்த போரை பயன்படுத்தி கொண்டு ரஷிய வீரர்கள் சிலர் அராஜகத்தில் … Read more

'லீவ்' போடாமல் லண்டன் 'டூர்' – வாட்ஸ் அப் கால் மூலம் தகவல் தெரிவித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் அலங்கிரிதா சிங்.  இவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்காமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.  கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி தனது உயர் அதிகாரிக்கு அலங்கிரிதா வாட்ஸ் மூலம் வீடியோ கால் செய்து தான் தற்போது லண்டனில் இருப்பதாக நாளை (அக்.20) பணிக்கு வர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து … Read more