’ரூபிளில் பணம் செலுத்தவில்லை’ ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தம் – ரஷியா அதிரடி

மாஸ்கோ,  உக்ரைன் மீது ரஷியா 63-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. … Read more

பிரசவித்த மனைவியை சொந்த காரில் அழைத்துச் செல்ல முயன்ற கணவர் மீது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தாக்குதல்..!

ஆந்திரா: ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், எஸ். ராயவரம் மண்டலம் தர்மபவரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ஜான்சி. நிறைமாத கர்ப்பிணியான ஜான்சிக்கு கடந்த 19-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஜான்சியை பிரசவத்திற்காக சேர்த்தனர். 20-ந் தேதி ஜான்சிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சியை நேற்று டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். இந்நிலையில் மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தையை … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மணிலா, ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத் விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்தின் அபிலுக் காடெரா ஹாங்-நாட்சனோன் துலாமோக் இணையை எதிர்கொண்டது.  27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.  … Read more

30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கபட்ட சமோசா

ஜெட்டா சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளின் ரகசிய தகவலையடுத்து அவர்கள் உணவகத்திற்கு செல்கின்றனர். அதில், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட பிற உணவுகள் உள்ளன. மதிய உணவு உட்பட மற்ற உணவுகள் அதே குளியலறையில் தயாரிக்கப்பட்டன. மேலும், உணவகத்தில் காலாவதியான இறைச்சிகள் மற்றும் பாலாடை கட்டி பயன்படுத்தப்பட்டு உள்ளன . அவைகளில் சில 2 … Read more

காங்கிரஸ் கட்சியின் இமாச்சல பிரதேச தலைவராக முன்னாள் முதல் மந்திரியின் மனைவி நியமனம்..!

சிம்லா, இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பிரதீபா வீர்பத்ர சிங்கை காங்கிரஸ் நியமித்துள்ளது. பிரதீபா வீர்பத்ர சிங் மறைந்த இமாச்சல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவிவார். இவர் மண்டி தொகுதியின் மக்களவை எம்.பி.யாக உள்ளார். இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி தக்கவைக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை … Read more

சென்னை அணி வீரர் மொயீன் அலி விரைவில் உடல் தகுதி பெறுவார் – பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர்.  இந்த நிலையில் பயிற்சியின் போது கணுக்காலில் காயம் அடைந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி (இங்கிலாந்து) நேற்று முன்தினம் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடவில்லை. அத்துடன் அந்த லீக் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் கையில் காயம் அடைந்த பேட்ஸ்மேன் அம்பத்தி … Read more

பாகிஸ்தான்: பல்கலைக்கழக வாசல் அருகே 'ஆசிரியை’ தற்கொலைப்படை தாக்குதல் – பரபரப்பு காட்சி

காபுல், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்படுகிறது. இந்த கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவ கிளர்ச்சி அமைப்பு அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகிறது. இதற்கிடையில், அந்நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரில் கராச்சி பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் சீன மொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் … Read more

தஞ்சை தேர் விபத்து: ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோக சம்பவம்’ – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி, தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் தஞ்சையில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 … Read more

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மரணம்

பெங்களூரு,  இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான எல்வெரா பிரிட்டோ(வயது 81) வயது மூப்பு பிரச்சினை காரணமாக பெங்களூருவில் நேற்று காலை மரணம் அடைந்தார். 1965-ம் ஆண்டில் அர்ஜூனா விருது பெற்றவரான எல்வெரா பிரிட்டோ ஆஸ்திரேலியா, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணிக்காக விளையாடி இருக்கிறார்.  இவருடைய சகோதரிகளான ரிதா, மே ஆகியோரும் ஆக்கி வீராங்கனைகள் ஆவர். 1960-களில் கர்நாடக மாநில அணி 7 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை … Read more

ரஷிய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு எதிராக தீங்கு  விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் ரஷிய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டுவது அல்லது இருப்பிடம் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பிறநாட்டு அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் வகையில்  செயல்படும் நபரின் அடையாளம் அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க … Read more