தென்கொரியாவில் ஒரே நாளில் 2.19 லட்சம் பேருக்கு கொரோனா

சியோல், கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் ஒமைக்ரான் தொற்றின் எதிரொலியால் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், நேற்று அது 2 லட்சத்தை தாண்டியது. அந்த வகையில் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 241 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் … Read more

பொருளாதார தடைகள் எஸ்400 ஆயுதத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது – ரஷியா

புதுடெல்லி, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன.  இதனால், ரஷியாவிடமிருந்து ஒப்பந்தத்தின்படி அதிநவீன எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பின் எஞ்சிய … Read more

காயத்தால் அவதி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆட்டங்களை தவற விடும் தீபக் சாஹர்

புதுடெல்லி,  15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். தொடங்க உள்ள நிலையில் தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சென்னை அணி நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.  கடந்த மாதம் 20-ந்தேதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது அவருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் தசைநார் கிழிந்து … Read more

“உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள்”- ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷிய அதிபர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதிலும் குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் … Read more

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.51 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் … Read more

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியல்: ரகானே, புஜாராவுக்கு சறுக்கல்

மும்பை, சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை, அவர்கள் ஊதியத்தின் அடிப்படையில் கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு … Read more

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் – வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்த இந்தியா

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு … Read more

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!

புவனேஸ்வர், மும்பை-புவனேஸ்வர் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஜிஎஸ்டி ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  முன்னதாக, நேற்று மும்பையைச் சேர்ந்த ஹஸ்முக்லால் ஜெயின், சுர்சே சஹாதேவ் கரே, மகேஷ் போம்சர் மற்றும் தீபக் படேல் ஆகிய 4 பேரும் ஒவ்வொரு பையிலும் தலா 8 கிலோ தங்க நகைகள் கொண்ட 4 பைகளுடன் மும்பை-புவனேஸ்வர் செல்லும் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். … Read more

கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரகானே-புஜாரா இடங்களை நிரப்பப்போவது யார்..?

மொகாலி,  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.  இந்த நிலையில், இப்போட்டியில் அஜிங்கியா ரகானே மற்றும் சடேஷ்வர் புஜாரா ஆகிய இருவருடைய இடத்தை பிடிப்பதற்கான போட்டி … Read more

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் – ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது … Read more