பாலியல் தொல்லை குறித்து புகார்: வீராங்கனையிடம் பாலினம் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி

சென்னை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் சர்வதேச அளவில் 12க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.  இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சக பயிற்சியாளர் பாலின ரீதியாக தொந்தரவு செய்ததாக  காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விசாரணையின்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர், சாந்தியிடம் பாலினம் குறித்து பேசியதாக … Read more

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு என தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  ரஷிய அழைப்பை ஏற்று பெலாரசில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் … Read more

மணிப்பூர் மாநில தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது..!

இம்பால், 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.   கொரோனா தொற்றால் … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க வீரர் கெய்ல் வேரின்னே அதிரடி சதம்

கிறிஸ்ட்சர்ச், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில்  சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அந்த அணி 364 … Read more

பாகிஸ்தான்: பஸ் – லாரி மோதி விபத்து – 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் வரை காயமடைந்துள்ளனர். முன்னதாக பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் மாவட்டத்தில் பயணிகள் பேருந்தும் லாரி ஒன்றும் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

உக்ரைனில் உச்சகட்ட போர்: இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!!

புதுடெல்லி,  ரஷியா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஆக்கிரமித்தது.  இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷியா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்த சூழலில் உக்ரைன் மீதான போர் தொடர்ந்து … Read more

“ஆபரேஷன் கங்கா”: உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக விமானங்களின் பட்டியல்..!

புதுடெல்லி,  உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு ‘பல்முனை’ ஆபரேஷன் கங்காவைத் தொடங்கியுள்ளது. இந்த வெளியேற்ற செயல்முறை அரசாங்க செலவில் இருக்கும். உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான விருப்பங்களை நாங்கள் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய புதிய டுவிட்டர் பக்கம் உருவாக்கம்!

புதுடெல்லி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக  புதிதாக டுவிட்டர் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பக்கத்தில்,  உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் விமான சேவை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த புதிய டுவிட்டர் பக்கத்திற்கு  ‘ஓப்கங்கா ஹெல்ப்லைன்’  என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி தெரிவித்தார்.  … Read more

தேசிய அளவிலான கார்பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை, கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய அளவிலான கார்பந்தயம் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று 2-ம் சுற்று போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். இன்று நடைபெற்ற எல்.பி.ஜி. … Read more

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் – உக்ரைன் எம்.பி.

கீவ்,  உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தாக்குதல் கடந்த பிப் 24 ஆம் தேதி அதிகாலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போர் 4வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது.  உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்கள் தலைநகரை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதிகொண்டு அங்கு சண்டை செய்து வருகின்றனர். இதேபோல் மற்றொரு … Read more