உபேர் கோப்பை பேட்மிண்டனில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி விலகல்

புதுடெல்லி,  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் மே 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டிக்குரிய இந்திய அணியில் இரட்டையர் இணையான சிக்கி ரெட்டி, அஸ்வினி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.  இந்த நிலையில் சிக்கி ரெட்டிக்கு வயிற்று பகுதியில் தசை நார் கிழிவு ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. எனவே அவரை 4-6 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். … Read more

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐநா கண்டனம்

நியூயார்க், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.  மசார்-இ-ஷரீப்பில் உள்ள சே டோகன் மசூதிக்கு எதிரான தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அரசு உரிமை கோரும் குண்டூஸில் தனி தாக்குதல்களினால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்தனர், பயங்கரவாதம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்றும், இந்த கண்டிக்கத்தக்க … Read more

கர்நாடகா: 11 அடி ராஜநாகத்தை பிடித்த பாம்பு பிடி வீரர்..!

கர்நாடகா: கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு அருகே செட்டிகொப்பா கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 11 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.  இதைகண்டு பதற்றமடைந்த கிராமத்தினர் உடனடியாக பாம்பு பிடி வீரர் ஹரீந்தீரா என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் ஹரீந்தீரா சர்வ சாதரணமாக 11 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். மேலும் இது அவர் பிடித்த 365 வது … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் அன்ஷூ மாலிக்

உலான்பாடர் (மங்கோலியா), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் ஜப்பானின் சுகுமி சகுராயிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அரியானாவை சேர்ந்த 20 வயதான அன்ஷூ ஆசிய போட்டியில் கைப்பற்றிய 3-வது பதக்கம் இதுவாகும். அவர் 2020-ம் ஆண்டு வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டு தங்கப்பதக்கமும் வென்று இருந்தார். மேலும் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய … Read more

சீன பிரதமருடன் மகிந்த ராஜபக்சே தொலைபேசியில் பேச்சு- சீனா உதவ உறுதி அளித்ததாக தகவல்

கொழும்பு,  இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில், இலங்கைக்கான சீன தூதர் ஜி ஜெங்காங், இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீசை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு சீனா உதவி அளிப்பது தொடர்பாக விவாதித்தார். இந்தநிலையில், நேற்று சீன பிரதமர் லி கேகியாங்கை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து மகிந்த ராஜபக்சே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சீன பிரதமருடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இலங்கை மக்களின் … Read more

கரைசேருமா காங்கிரஸ்…!பிரசாந்த் கிஷோரின் கட்சியின் "மறுபிறவி" திட்டம் என்ன- முழுவிவரம்

புது டெல்லி: பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் … Read more

‘விஸ்டன்’ கவுரவ பட்டியலில் இந்திய வீரர்கள்

லண்டன், கிரிக்கெட்டின் ‘பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இங்கிலாந்தில் இருந்து வெளியாகிறது. கிரிக்கெட் தகவல்களை தாங்கி வரும் இந்த இதழில் வீரர்களின் பெயர் இடம் பிடிப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விஸ்டன் பதிப்பில் சிறந்த வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிவான் கான்வே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் மற்றும் தென்ஆப்பிரிக்க வீராங்கனை டேன்வான் நிகெர்க் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் … Read more

குழந்தைகள் கண் முன்னே இளம் பெண் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை

புது டெல்லி: டெல்லியில் இளம்பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்த குற்றவாளி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- தென் மேற்கு டெல்லி சாகர்பூர் காவல் நிலையத்திற்கு  நேற்று பகல் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்  மர்ம … Read more

ஆசிய விளையாட்டுக்கான இந்திய பேட்மிண்டன் அணியில் இடம்பெற்ற 14 வயது வீராங்கனை

புதுடெல்லி, தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் மே 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரையும், ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் நடக்கிறது.  இந்த மூன்று போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணிக்கு தரவரிசையில் டாப்-15 இடத்திற்குள் இருப்பவர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு 6 நாட்கள் டெல்லியில் தகுதி போட்டி நடத்தப்பட்டது. … Read more

தமிழக மீனவர்கள் 4 பேர் விடுவிப்பு…!

கொழும்பு, இலங்கை யாழ்பாணம் சிறையில் உள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 4 பேரை விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் மார்ச் 24-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.  எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் ஓரிரு நாளை தமிழகம் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.