டி.என்.பி.எல். கிரிக்கெட்: அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு

சென்னை,  5-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சேலம், நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை டி.என்.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், அருண், அருண்குமார், ஹரிஷ்குமார், என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் … Read more

தொடர் போராட்டம் – இலங்கையில் மேலும் 3 எம்பி.க்கள் ஆதரவு வாபஸ்

கொழும்பு  இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.  பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒருவாரத்திற்கும் … Read more

ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் கோவா முதல் மந்திரி சந்திப்பு

புதுடெல்லி, கோவா மாநில சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 2 வது முறையாக பிரமோத் சாவந்த் முதல் மந்திரியாக பதவியேற்றார். இந்த நிலையில் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக பிரமோத் சாவந்த் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கோவா அரசின் மாநில வளர்ச்சிப் பணிகள் … Read more

‘விராட் கோலிக்கு ஓய்வு தேவை’ – முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதம் அடிக்க முடியவில்லை. தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கோலி, நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆனார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும் 33 வயதான … Read more

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

நியூயார்க், பிலிப்பைன்சின் மானாய் நகரில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மானாய் நகரின் கிழக்கு தென்கிழக்கு திசையில் 51 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 09.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியின் தரைப்பகுதியில் இருந்து 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பள்ளி பஸ்சின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த 3 ஆம் வகுப்பு மாணவன் தலையில் மின்கம்பம் மோதி உயிரிழப்பு!

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மாணவன், ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில், மின்கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதனால், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தில், பள்ளி … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு 5 வெண்கலப் பதக்கங்கள்

உலான்பாடர் (மங்கோலியா), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தஹியா, பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 இந்திய மல்யுத்த வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் ஆண்கள் அணியிலிருந்து 20 மல்யுத்த வீரர்கள், மகளிர் அணியைச் சேர்ந்த 10 மல்யுத்த வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் 1.28 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் நேற்று நடந்த கிரிகோ … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.88 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 1 ஆயிரத்து 247 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 2 ஆயிரத்து 67-ஐ விட அதிகமாகும்.  இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து … Read more

கேஎல் ராகுலுக்கு விரைவில் திருமணம் ? – வெளிவந்த தகவல்..!!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக திகழ்பவர் கேஎல் ராகுல். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் லக்னோ அணியை வழிநடத்தி வருகிறார். இவரும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் பல நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதியா ஷெட்டி, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டியின் மகளாவார். கிரிக்கெட் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நடப்பு தொடரில் ராகுல் விளையாடும் லக்னோ அணியின் போட்டிகளை ஒன்று விடாமல் மைதானத்திற்கு வந்து பார்த்து … Read more