பிரான்சில் உள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..!

பாரிஸ்,  தெற்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) காலை தெற்கு பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. பின்னர் தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது.  இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட … Read more

விடுதி உரிமையாளருடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது

பெரும்பாவூர், கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரின்சினா (வயது 26). இவர் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்தார். பின்னர் இருவரும் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி … Read more

‘கோடி’களில் ஏலம் எடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள்..!

பெங்களூரு, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. ஜூனியர் வீரர்களில், இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் … Read more

இந்தோனேசியாவில் ராட்சத அலையில் சிக்கி 11 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்கிற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து. இதையொட்டி 20-க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்ச அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு … Read more

ஐதராபாத் அருகே ராமானுஜரின் தங்க திருவுருவச் சிலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்

ஐதராபாத்,  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் முச்சிந்தல் கிராமத்தில் உள்ள ஜீவா ஆசிரமத்தில், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மிகப் பெரியவர் ராமானுஜரின் புகழைப் போற்றும்விதமாக சமத்துவ சிலை வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 120 கிலோ தங்கத்தில் ராமானுஜரின் திருவுருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. சமத்துவ சிலை வளாகத்தின் உள் கருவறைப் பகுதியில், பரந்த தியான மண்டபத்தை நோக்கியதாக இச்சிலை அமைந்திருக்கிறது. பக்தர்கள் இந்த தியான மண்டபத்தில் அமைதியாக தியானத்தில் ஆழலாம். கி.பி.1017-ம் ஆண்டில் தமிழகத்தில் பிறந்த ராமானுஜர், … Read more

‘மிஸ்டர் ஐ.பி.எல்’க்கு பிரியாவிடை.. சோகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்!

பெங்களூரு, ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் நேற்று தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்று வந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார். ஆனால் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.  இந்த நிலையில், சமூக … Read more

ரஷிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரட்டியடிப்பு

மாஸ்கோ,  உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பசிபிக் கடலில் உள்ள குரில் தீவுக்கு அருகே ரஷியாவின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ்’ போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷிய கடல் பகுதியில் … Read more

காதலர் தினத்தை கொண்டாட புதுவையில் குவிந்த காதல் ஜோடிகள்

புதுச்சேரி, புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற்கிடையே இன்று (திங்கட்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுவையில் நேற்று சுற்றுலா பயணிகள், காதலர்கள் குவிந்தனர். இதன்காரணமாக புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. குறிப்பாக புதுச்சேரி நகர பகுதியில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் உலா வருவதை காண முடிந்தது. காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலர்கள் பரிசு பொருட்கள் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி … Read more

சீனாவில் பஸ் வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்

பெய்ஜிங், வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 42 பேர் காயமடைந்தனர். லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங் நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. வெடிப்பு ஏற்பட்டபோது பெரும் சத்தம் கேட்டதாகவும் ஆனால் பேருந்து தீப்பிடிக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் பெரும் காயமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பைச் சிதறலுடன் பஸ் … Read more