ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய சஹால்- கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணி வகிக்கும் … Read more

ரஷிய அதிபருடனான உரையாடல் நிறுத்தப்பட்டது: பிரான்ஸ் அதிபர்

பாரிஸ், உக்ரைனில் நடந்த “பாரிய படுகொலைகள்” தொடர்பாக புதினுடனான உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.  “புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷியாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பிறகு நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை”. தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறினார்.   உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு தனக்குத்தானே ஆதரவு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய … Read more

கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு – தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த சோகம்

ஷிலாங்க், 83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர். அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர … Read more

உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு; ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ, நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா நடத்தி வரும் போர் 54வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.  பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.  உக்ரைன் படை வீரர்களில் 23 ஆயிரத்து 300 பேர் இதுவரை கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி இகோர் கொனாஷெங்கோவ் போர் தாக்குதல் பற்றி கூறும்போது, உக்ரைன் … Read more

8 நாட்கள் சுற்றுப்பயணம் மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை

மும்பை, இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் நேற்று முதல் 24-ந் தேதி வரை 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.  இந்த திட்டத்தின்படி நேற்று அவர் விமானம் மூலம் மும்பை வந்தார். அதிகாலை 1.20 மணி அளவில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.  பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வருகிற 19-ந் தேதி குஜராத் … Read more

ஐபிஎல் 2022: புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  குஜராத் – சென்னை  அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .இதனால் விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . 2வது இடத்தில் லக்னோ அணியும் ,3 வது இடத்தில் பெங்களூரு அணியும் ,4 வது … Read more

கருங்கடல் துறைமுகங்களில் நுழைய ரஷிய கப்பல்களுக்கு பல்கேரியா தடை

சோபியா.  உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வகையில் ரஷிய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைய பல்கேரியா தடை விதித்துள்ளது. இதை அந்த நாட்டின் கடல்சார் ஆணையம், தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆபத்தில் உள்ள கப்பல்கள், மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள், எரிசக்தி பொருட்கள், உணவு, மருந்துகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் புயல், மின்னல் தாக்குதல்: 3 ஆயிரம் வீடுகள் சேதம்; 20 பேர் உயிரிழப்பு

திஸ்பூர், அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து இதுவரை புயல் மற்றும் இடி, மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி திரிபாதி கூறும்போது, கடந்த 14ந்தேதியில் இருந்து 3 நாட்களில் 1,410 கிராமங்களை உள்ளடக்கிய 80 வருவாய் வட்டங்களை கொண்ட 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி, மின்னல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 14ந்தேதி பலத்த வேகத்துடன் புயல் காற்று வீச … Read more

தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: அரியானா அணி சாம்பியன்..!

போபால், 12-வது தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – அரியானா அணிகள் மோதின.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் அரியானா 3-1 என்ற கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.  2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்ற தமிழக அணி வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.54 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 46 லட்சத்து 56 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more