இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய … Read more

காதலியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து மனைவியை தீர்த்து கட்டிய தொழிலதிபர்

சண்டிகார், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவராக இருப்பவர் அனோக் மிட்டல் (வயது 35). தொழிலதிபரான இவருடைய மனைவி லிப்சி மிட்டல். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அனோக் மிட்டலுக்கு 24 வயதுடைய இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை லிப்சி கண்டுபிடித்து விட்டார். இதனால், அவரை தீர்த்து கட்ட அனோக் முடிவு செய்துள்ளார். இதற்காக காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தேலோ நகருக்கு மனைவியுடன் அனோக் … Read more

புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

புவனேஷ்வர், 6-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. பிற்பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய … Read more

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய மந்திரி இன்று பேச்சுவார்த்தை

மாஸ்கோ ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார் . உக்ரைன் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வழியாக உரையாடினர். அப்போது உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு அமெரிக்க தரப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இதனை புதின் … Read more

மத்திய பிரதேசத்தில் வேன் மீது லாரி மோதி விபத்து – 5 பேர் பலி

போபால், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், திருமண விழாவிற்கு சென்ற கோஷ்டியினர், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் வேனை நிறுத்தி, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். வேனிலும் சிலர் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேன் மீதும், நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் … Read more

இந்திய தேசிய கொடி கராச்சி மைதானத்தில் ஏன் ஏற்றப்படவில்லை? பாக். கிரிக்கெட் வாரியம் விளக்கம்

கராச்சி, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் … Read more

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் தீவிர தொற்று; தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், போப்புக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெறுவார். இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறும்போது, வைரசுகள், … Read more

பெங்களூருவில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க குடிநீர் வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிக்கு குடிநீரை பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் திரும்ப … Read more

அதிரடியில் மிரட்டிய மந்தனா: பெங்களூரு அணி அபார வெற்றி

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா … Read more

வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: ஷேக் ஹசீனா

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேசஅரசு கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இது தொடர்பாக இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிளில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், வங்காளதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா … Read more