நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வீடுகளை ஒப்படையுங்கள் – சீன அரசு உத்தரவு

பீஜிங், சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான பாதிப்புகள், நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பதிவாகின்றன. இந்நிலையில், சீனாவில் நேற்று முன்தினம் 29 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில், 27 ஆயிரம் பேர் ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நகரில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து, வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற ஷாங்காய் நிர்வாகம் முடிவெடுத்து, அவற்றை ஒப்படைக்கக் கோரி, பொதுமக்களிடம் உத்தரவிட்டு உள்ளது.  எனவே, போலீசார் … Read more

முஸ்லிம்கள் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறி மும்பையில் நடக்க இருந்த கலவரத்தை தடுத்தேன் – பட்னாவிசுக்கு சரத்பவார் பதில்

மும்பை, முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் டுவிட்டரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரத்பவார் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில் 1992-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதியில் குண்டு வெடித்ததாக பொய் கூறியதாக கூறியிருந்தார். இதேபோல சரத்பவார் சாதி அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து சரத்பவார் கூறுகையில், “இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஒரு பகுதியில் குண்டு வெடித்ததாக நான் … Read more

மாநில பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி..!

சென்னை, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை சார்பில் மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி அணிகள் கைப்பந்து போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.  இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 25-17, 25-16 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ. டி. அணியை தோற்கடித்தது.  மற்ற ஆட்டங்களில் பி.கே.ஆர். அணி 15-25, 25-12, 25-23 என்ற … Read more

தொடர்ந்து குறையும் பாதிப்பு தென்கொரியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சியோல்,  தென்கொரியாவில் ஒமைக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாத மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியிருந்தது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. இந்தநிலையில் தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 1¼ லட்சமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஒரு நாளில் அங்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து … Read more

டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி..!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஓய்ந்து வந்த நிலையில் தலைநகா் டெல்லியில் திடீரென கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.  இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.  தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சாிக்கை 3-வது டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் … Read more

ஐபிஎல் : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் திரிபாதி அதிரடி அரைசதம்

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 … Read more

பாகிஸ்தானில் டீசல் விலை ரூ.195 ஆக உயரும் அபாயம் – பெட்ரோல் விலை ரூ.171 ஆக அதிகரிக்குமா?

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய இம்ரான்கான் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது.  கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படையில், டீசல் லிட்டருக்கு ரூ.41-ம், பெட்ரோலுக்கு ரூ.24-ம் மானியமாக கொடுத்து வந்தது. அதனால், தற்போது டீசல் விலை ரூ.144 … Read more

கொரோனாவின் தீவிரத்தை தவிர்க்க சமூக விலகலும், முக கவசமும் கட்டாயம் தேவை நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி,  நாட்டில் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில் தற்போது டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மீண்டும் நோய் பரவுவதற்கு காரணம், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் கைவிட்டதுதான் என அவர்கள் கூறுகிறார்கள். டெல்லியில் தற்போது பரவும் தொற்று, டெல்டா … Read more

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின   டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஷ்ரேயாஸ் … Read more

இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்

கொழும்பு,  இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, வாகனங்கள் … Read more