"ஓட்டல்களில் தங்கக்கூடாது; உறவினர்களை உதவியாளராக நியமிக்கக்கூடாது" – உ.பி. மந்திரிகளுக்கு யோகி ஆதித்யநாத் கிடுக்கிப்பிடி
லக்னோ, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச மந்திரிகள், அரசுமுறை பயணமாக வெளியூர் செல்லும்போது, ஓட்டல்களில் தங்கக்கூடாது. விருந்தினர் விடுதிகளில்தான் தங்க வேண்டும். அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மந்திரிகள், தங்கள் உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமிக்கக்கூடாது. அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை … Read more