பிலிப்பைன்சில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

மணிலா, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நேற்றுமுன் தினம் ‘மேகி’ என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்துவாங்கியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது. 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை … Read more

தனியார் மையங்களுக்கு இலவச கோவிஷீல்டு தடுப்பூசி சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி,  இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் நேற்று முதல் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை தனியார் தடுப்பூசி மையங்களுக்கு விலை குறைத்து ஒரு டோஸ் ரூ.225 என்ற விலைக்கு வழங்குவதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனே இந்திய சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்நிலையில், தனியார் தடுப்பூசி மையங்களில் ஏற்கனவே இருப்பு … Read more

ஐபிஎல் : புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின . இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி  3  வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது . 2-வது இடத்தில் கொல்கத்தா அணியும் ,3-வது இடத்தில் குஜராத் ,4-வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன.

பாகிஸ்தான் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் தம்பி தேர்வாகிறார்: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுப்பதவிக்காலமும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது இல்லை என்ற வரலாறுக்கு இம்ரான்கானும் விதிவிலக்கு இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு அங்கு இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஓட்டெடுப்புக்கு விடுவதில் பெரும் இழுபறி நிலவியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் இணங்கி நடக்கவில்லை. ஒரே நாளில் … Read more

குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணசாமி கோவிலுக்கு கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர், ‘குருவாயூர் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும்’ என்றும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் … Read more

2-வது டெஸ்ட் : வங்காளதேச அணிக்கு 413 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எர்வி களமிறங்கினர். எர்வி 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய பீட்டர்சன் டீன் எல்கருடன் ஜோடி … Read more

#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்த 13 கி.மீ. தொலைவுக்கு ரஷிய போர் வாகனங்கள் அணிவகுப்பு

கீவ்,  உக்ரைன் மீது ரஷிய ராணுவம் 47-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மார்ச் 11, 3.00 A.M மிகப்பெரிய போருக்கு தயார் – உக்ரைன்  ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கெலோ பொடொல்யாக் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலூம், இரு பிரிவினைவாத பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு டோன்பாஸ் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷியப் படைகளை … Read more

விலைவாசி உயர்வு குறித்து விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் காங். பெண் தலைவர் வாக்குவாதம்

புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.கவுகாத்தியை அடைந்தவுடன், பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா வந்தார். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி … Read more

ஐபிஎல் : லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 'திரில்' வெற்றி..!

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின  இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது  தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல்  சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால்  அந்த அணி … Read more

தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு

சியோல்,  ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது உண்டு. இந்த நிலை இப்போது மாறி வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 481 ஆக சரிவை சந்தித்தது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 33 … Read more