புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி இடையிலான ஆட்டம் "டை"

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணியும் இரவு 7.30 மணியளவில் மோதின.  பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியானது 39-39 என சமனில் முடிந்தது. இதையடுத்து புனேரி பல்டன்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதி வருகிறது.

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,97,076 பேருக்கு தொற்று

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  இதுவரை உலக அளவில் 40.47 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.99 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி … Read more

மராட்டியத்தில் புதிதாக 6,248 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

மும்பை, மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்தநிலையில், தற்பொது குறையத்தொடங்கி உள்ளது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6 ஆயிரத்து 248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,29,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் … Read more

ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தில் கிறுக்கிய காவலாளி; வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே பணிநீக்கம்..!

மாஸ்கோ, ரஷியாவில் நடைபெற்ற கலை கண்காட்சியில் பாதுகாப்பு காவலாளி ஒருவர் போரடித்தது என்று ஓவியம் ஒன்றின் மீது கிறுக்கியதால் சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியம் சிதைக்கப்பட்டது. மேற்கு ரஷியாவில் யெகாடெரின்பர்க் நகரத்தில் உள்ள யெல்ட்சின் மையத்தில் இந்த கலை கண்காட்சி நடைபெற்றது. 60 வயதுள்ள அந்த காவலாளி வேலைக்குச் சென்ற முதல் நாளே, டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாகப் பெறப்பட்ட கலைஞர் லெபோர்ஸ்காயாவின் ‘மூன்று உருவங்கள்’ (Three Figures) என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் … Read more

உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!

லக்னோ, உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் … Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

அகமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்னதாக ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர்களால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது. கொரோனா பாதிப்புக்கு ஆளான தவன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே … Read more

பிரிட்டன் இளவரசருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று.!

லண்டன், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று காலை கொரோனா பறிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இளவரசர் சார்லஸ் ஏற்கெனவே கடந்த மார்ச் 2020-ல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேரு நினைத்திருந்தால் சில மணி நேரத்தில் கோவாவை விடுதலை செய்திருக்கலாம் – பிரதமர் மோடி பாய்ச்சல்

பனாஜி, 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த (1947) பிறகு … Read more

புரோ கபடி லீக்: இன்று பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதல்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.