ஐக்கிய அரபு அமீரகம்: போதைப்பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்ணுக்கு மரண தண்டனை..!!

அபுதாபி,  ஐக்கிய அரபு அமீரகத்தில் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக இஸ்ரேலிய பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 43 வயதான பிடா கிவான் என்று இஸ்ரேலிய ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த பெண், தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபாவில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் கிவான், ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்கு வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு … Read more

தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரும் மனு விரைவில் விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,  தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரும் மனுக்கள் ஓராண்டுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளன.  சுங்கவரி துறையினரின் சோதனையை தவிர்க்கும்வகையில் ரூ.40 கோடி, தேர்தல் நிதி பத்திரத்தின் வாயிலாக செலுத்தப்பட்டுள்ளது. … Read more

தினேஷ் கார்த்திக் அதிரடியால் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி..!!

 மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால்  6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் – … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து – அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீர் உத்தரவு..!!

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து, இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெறுமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து … Read more

உக்ரைன் விவகாரம்: மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் ஜெய்சங்கர்

புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதில் உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக லோக்சபா எம்.பி., பிரேம் சந்திரன், காங். எம்.பி. மணீஷ் திவாரி ஆகியோர் , அரசியலமைப்பு சட்டம் விதி 193-ன் கீழ் விவாதம் நடத்திட கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை பதிலளிக்க … Read more

"தோனிக்கு ஜடேஜா தலைவலி கொடுக்கிறார் "- ஹர்பஜன் சிங் சாடல்

மும்பை, ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்னடைவை சந்தித்து உள்ளது.    சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜாவிற்கு பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் ஜடேஜா பீல்டிங் ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து … Read more

நெதர்லாந்து சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

ஆம்ஸ்டர்டாம்,  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐரோப்பாவின் துர்க்மேனிஸ்தான் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். துர்க்மேனிஸ்தான் பயணத்தை முடித்து கொண்ட அவர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். அவருக்கு நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் அரச முறைப்படி வரவேற்பு அளித்தனர். 1988-ம் ஆண்டு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பயணம் செய்த பின்னர் 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்திய ஜனாதிபதி மீண்டும் நெதர்லாந்து சென்றுள்ளார்.

மாநிலங்களவையில் 200 தடவை குரல் வாக்கெடுப்பு நடந்த மசோதா

புதுடெல்லி,  மாநிலங்களவையில், பட்டய கணக்காளர், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், கம்பெனி செயலாளர்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அம்மசோதா, 106 உட்பிரிவுகளை கொண்டது. ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒப்புதல் பெறும்வகையில், ஒவ்வொரு உட்பிரிவையும், அதற்கு உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களையும் குரல் வாக்கெடுப்புக்கு விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மட்டும் திருத்தங்களுக்காக 163 நோட்டீஸ்கள் கொடுத்திருந்தார். பெரும்பாலான திருத்தங்களை அவர் முன்வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் பினாய் விஸ்வமும் சில திருத்தங்களை கொண்டு வந்தார். … Read more

ஜாஸ் பட்லர் அரைசதம் : பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால்  6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் … Read more

இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!

கொழும்பு, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததால் பெட்ரோல்,டீசல், கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், இலங்கை ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.300-ஐ கடந்து விட்டது. அந்தவகையில் இலங்கை வர்த்தக வங்கிகளில் நேற்று டாலரின் மதிப்பு ரூ.310 ஆக இருந்தது. … Read more