மராட்டியத்தில் கட்டிடத்தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

மும்பை, மராட்டியத்தின் நான்டெட் நகரில் கட்டிடத்தொழிலாளியான சஞ்சய் பியானி என்பவர் தன் வீட்டு வாசலில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போது, பைக்கில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொலை சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  ​​தொப்பி அணிந்து கருப்பு உடை அணிந்த இருவர் கட்டிடத்தொழிலாளியை சரமாரியாக  சுட்டுக்கொலை செய்துள்ளனர்.  இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிய வராத  நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

லாகூர், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

உக்ரைன்: புச்சா படுகொலைகளுக்கு ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம் – விசாரணைக்கும் ஆதரவு..!!

ஜெனிவா,  உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.    இதற்கிடையே, உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், … Read more

புதன்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினம் – லட்சத்தீவு நிர்வாகம் அறிவிப்பு

கவரட்டி, லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவிக்கப்படுகிறது என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சைக்கிள் தினம் நாளை(ஏப்ரல் 6) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்ற 13-வது லட்சத்தீவு மாசுக் கட்டுப்பாட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கான … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பட்லர்- படிக்கல் ஜோடி நிதான ஆட்டம்

 மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால்  6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் – … Read more

இலங்கையில் தொடரும் நெருக்கடி: பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதி மந்திரி ராஜினாமா…!

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ளது. பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரி சபை அமைக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் நிதி மந்திரியாக இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டார். அலி சப்ரி மற்றும் மேலும் … Read more

மக்கள் மீது பாஜக விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளது – குமாரசாமி

பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதாவின் விலைவாசி உயர்வின் கொடூரம் தொடர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாத அரசுக்கு மக்களிடம் பணம் பறிப்பதே தொழிலாகிவிட்டது.  தரமான மின்சாரத்தை வழங்க முடியாத அரசு, கட்டணத்தை உயர்த்துவதில் மட்டும் ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது.  ஏழை மக்கள் வீடுகளை கட்ட முடியாது. வயிறு நிறைய சாப்பிட … Read more

பஞ்சாப் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் அரோராவுக்கு ஷிகர் தவான் புகழாரம்

மும்பை, ஐபிஎல் 15ஆவது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் ஷர்மா, வைபவ் அரோரா ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் இடம்பெற்றனர். சிஎஸ்கேவுக்கு எதிராக அறிமுக வீரர் வைபவ் அரோரா சிறப்பாக பந்து வீசினார். வைபவ் அபாரமாக பந்துகளை ஸ்விங் செய்து, பிரமிக்க வைத்தார். குறிப்பாக தீபக் சஹாரைப் போல இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இரண்டையும் வீசி அசத்தினார். இவரது பந்துகளை … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கொழும்பு,  இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். இதல் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் அடங்குவார். அவர்களது ராஜினாமாவை அதிபர் … Read more

இந்தியாவின் ரிக்கி கேஜ் இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார்! பிரதமர் மோடி பாராட்டு

லாஸ் வேகாஸ், இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.  இந்த விழாவில், ரிக்கி கேஜ்  இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார். “டிவைன் டைட்ஸ்..” என்ற ஆல்பம் பாடலுக்காக, ஸ்டீவர்ட் கோப்லேண்ட் உடன் சேர்ந்து அவர் விருது பெற்றுள்ளார். விருது மேடையில், ரிக்கி கேஜ் பார்வையாளர்களை நோக்கி  “நமஸ்தே” என்று வணக்கம் … Read more