இலங்கையில் மீண்டும் செயல்படத் தொடங்கிய சமூக வலைதளங்கள்..!

கொழும்பு, இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது … Read more

ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரியவகை ரசாயன பொருட்கள் அறிமுகம்!

புதுடெல்லி, ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரியவகை ரசாயன மேற்கோள் பொருட்களை மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் அறிமுகப்படுத்தினார். தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தின் (என்டிடிஎல்) சாதனையாக, ஆறு புதிய வகை மேற்கோள் பொருட்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஊக்கமருந்து சோதனை ஆயவகங்களுக்கு தேவையான தூய்மையான ரசாயனமாக இது உள்ளது.  கவுகாத்தியில் உள்ள  ‘தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ மற்றும்  ஜம்முவில் உள்ள ‘இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் (சிஎஸ்ஐஆர்)’ ஆகியவற்றுடன் … Read more

350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த  போட்டியில் விளையாடிய டோனிக்கு இது 350வது டி20 போட்டி ஆகும் . இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை  பெற்றார் டோனி.

தென்கொரியாவில் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.   இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

நாட்டின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை: ராஜ்நாத்சிங்

ஒற்றுமைக்கு முயற்சி ‘சேடக்’ ஹெலிகாப்டர் அறிமுகப்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, இந்திய விமானப்படை சார்பில், ஐதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:- நாட்டுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உண்மையான அஞ்சலி செலுத்துவதாக அமையும். நாட்டின் பாதுகாப்புக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். அதன் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் … Read more

ஐ.பி.எல் : டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வருகிற  10 -வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில்  தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் … Read more

5 வடகொரிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்,  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை புறக்கணித்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளபோதும், வட கொரியா தளராமல் தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது உலக அரங்கை அதிர … Read more

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

அகமதாபாத், குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து டெல்லி முதல்மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு குஜராத் மக்களிடம் அவர் வலியுறுத்தினார்.  மேலும், தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குஜராத்தில் நிலவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறினார். அகமதாபாத்தில் திரங்கா யாத்திரையின் போது … Read more

புரோ ஹாக்கி லீக் : இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புவனேஷ்வர், 9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.  இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இந்நிலையில் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்ட்டது . இதில் 3-2 என்ற கோல் … Read more

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா, ஒமைக்ரானை விட வேகமாக பரவும்- உலக சுகாதார அமைப்பு

லண்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக  கொரோனா வைரஸ் கடந்த 2019- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது … Read more