அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை – உ.பி. அரசு உத்தரவு
லக்னோ, உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தேர்வு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் … Read more