மராட்டிய ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் மகுடம் சூடினர்

புனே, மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.  இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலிய நாட்டின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். இந்த இறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன்மூலம், போபண்ணா … Read more

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பையில் போடும் காகங்களுக்கு நிலக்கடலை பரிசு …!

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் “உற்பத்தி” செய்யப்படுகின்றன. இப்படியாக நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும் கழிவுகளில் ஒரு சிறிய பங்களிப்பு தான் – சிகரெட் துண்டுகள்.  இந்நிலைபாட்டில் “இதே சிகரெட் கழிவுகள்” சமாச்சாரத்தின் கீழ், ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் செயல் இணையத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது; வைரல் ஆகி வருகிறது. சிகெரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள மெஷினில் காகங்கள் எடுத்து வந்து போடும். ஒவ்வொரு சிகரெட் துண்டுக்கும், சில … Read more

21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்

மும்பை, மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்,  ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து  தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில்,  மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து  இறுதி … Read more

இந்திய அணி தனது ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு!

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெஸ்ட் … Read more

கொரோனா பாதிப்பு: ரஷ்யாவில் புதிய உச்சம்

மாஸ்கோ,  ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. தொற்று பரவிய காலம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 071- ஆக பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று பாதிப்பு இந்த அளவுக்கு  உயர்ந்துள்ளதாக  மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பால் மேலும் 661- பேர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.8 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 35 … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது! இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 6,809 குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 88,098 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 58,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் … Read more

1000-வது ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்..!

ஆமதாபாத், இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில், போட்டியின் 20-வது ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசிய போது அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி … Read more

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – இந்திய தூதரகம் கண்டனம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை நேற்று சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இந்த சம்பவத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்துச் சென்றுள்ள தூதரக அதிகாரிகள், … Read more

ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு: சிலையை திறந்துவைத்தபின் பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்,   வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ 1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெருமை மிகுந்த சிலையை திறந்துவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  இன்று  மாலை சின்ன ஜீயர் ஆசிரமத்திற்கு வந்தார். மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலையை திறந்துவைத்தார். சிலையை திறந்துவைத்தபின்னர் … Read more

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 189 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் … Read more