மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: மதுரை அணி சாம்பியன்

கரூர்,  கரூர் டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 5-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 25-ந் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. இதில் கரூர், திருச்சி, கோவை, சென்னை, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் மதுரை அணியும், கரூர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.  இறுதி போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை  முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு . சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. … Read more

ஜனாதிபதி பதவியா…? எனக்கு வேண்டாம்; மாயாவதி அறிவிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழலில், அக்கட்சி தலைவர் மாயாவதி கூறும்போது, இந்த தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டு பொய்யான பிரசாரம் மேற்கொண்டது.  உ.பி.யில் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு … Read more

அக்சர், லலித் அதிரடி : மும்பையை வீழ்த்தி டெல்லி அசத்தல் வெற்றி

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன், 2-வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.  இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா … Read more

எல் சால்வடார் நாட்டில் ஒரே நாளில் 62 பேர் கொலை; அவசரநிலை பிறப்பிப்பு

சான் சால்வடார், எல் சால்வடார் நாட்டில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.  பல கொலைகார கும்பல்கள் மிரட்டல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதிபர் நயீப் புகெலே 2019ம் ஆண்டு பொறுப்பேற்றதும் திட்டமிட்ட குற்ற செயல்களை ஒழிப்பேன் என்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார். எனினும், 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3 நாட்களில் 50க்கும் கூடுதலான மக்கள் கொல்லப்பட்டனர்.  இதனை தொடர்ந்து சிறையில் உள்ள கொலைகார … Read more

நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐநாக்ஸ் இணையவுள்ளதாக அறிவிப்பு

புதுடெல்லி, நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் லிமிலெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு நிறுவனங்கள் இணைந்த நிலையில், தற்போது இந்த திரையரங்குகள் அனைத்தும் பிவிஆர்-ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? – மிதாலிராஜ் விளக்கம்

கிரிஸ்ட்சர்ச், இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியை தழுவி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ், மெய்நிகர் வீடியோவில் போட்டியளித்தார். அப்போது ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,  நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற … Read more

நேபாள அதிபர் – சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

காத்மண்டு, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இன்று நேபாள நாட்டிற்கு சென்றார். நேபாள அதிபர் பித்யதேவியை சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.   இதற்கிடையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ராணுவத்தின் 2 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை

புதுடெல்லி, இந்திய ராணுவத்தின் நடுத்தர ரக நிலப்பரப்பில் இருந்து வானில் சென்று தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் இன்று விண்ணில் ஏவி பரிசோதனை செய்தது. ஒடிசா கடற்கரையோரம் சந்திப்பூர் நகரில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில், இந்த அதிவிரைவு வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் முதல் பரிசோதனையில், நடுத்தர உயரத்தில், அதேநேரத்தில் நீண்ட தொலைவு செல்ல கூடிய பொருளை, ஏவுகணை நடுவானில் தாக்கி அழித்தது.  2வது பரிசோதனையில், … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டாவதாக நடைபெறும் 3 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடி வருகிறது.