பெண்கள் உலக கோப்பை; 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில் இன்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில் இந்திய மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா – ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 ரன்களிலும் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்கள் … Read more

உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்; ஐநா

கீவ், உக்ரைன் மீது கடந்த 27 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற பல முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலால், உக்ரைனில்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.  அண்டை நாடுகளிலும் அகதிகளாக மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 35 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் … Read more

சென்னைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது-கர்நாடக முதல் மந்திரி

பெங்களுரு கர்நாடக சட்டசபையின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது;- சென்னை நகருக்கு குடிநீரே இல்லை. முன்பு ரெயில்களில் குடிநீர் கொண்டு செல்வார்கள். அந்த நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் 15 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. கிருஷ்ணா ஆற்று படுகையில் தமிழகம் இல்லாதபோதும், மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் வழங்க ஒப்புக்கொண்டோம். சென்னைக்கு தற்போது குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது என்பதை அவர்கள் மறக்கக்கூடாது. ஆனால் … Read more

லாகூர் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 90/1

லாகூர், 24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் … Read more

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு – பொதுமக்கள் கடும் அவதி

ஹவானா, கியூபாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் பொதுமக்களுக்கு குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டாலும், அதனை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். இது குறித்து அந்நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்யும் … Read more

கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரைக்காக உத்தரகாண்ட் வழியாக புதிய சாலை! மந்திரி நிதின் கட்காரி

புதுடெல்லி, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கைலாஷ் யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக நடத்துகிறது. இந்த நிலையில், மானசரோவர் புனித தலத்திற்கு இனிமேல் சீனா மற்றும் நேபாளம் வழியாக பயணிக்க வேண்டிய நிலை இருக்காது. … Read more

பெண்கள் உலக கோப்பை; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

வெலிங்டன், பெண்கள் உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில் இன்று நடந்த 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா உல்வார்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சுனே லூவஸ் 52 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் … Read more

பொருளாதார தடை எதிரொலி: சூப்பர் மார்க்கெட்டில் சர்க்கரைக்கு போட்டி போட்ட ரஷியர்கள்- வைரல் வீடியோ

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபேச்சு இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.  2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷியாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார தடை எதிரொலியால் ரஷியாவில் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது. … Read more

தமிழகத்தின் தீர்மானத்தை கண்டித்து நாமும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் -சித்தராமையா ஆவேசம்

பெங்களூரு கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அம்மாநில அரசு புதிதாக அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1000 கோடியை கர்நாடக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து மோதல்கள் உள்ளன. கர்நாடக அரசுக்கு அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி … Read more

பெண்கள் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது இந்திய அணி

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெற்று வரும்  22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா – ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 … Read more