இங்கல்ல இலங்கையில் …! ஒரு கிலோ கோழி கறி ரூ.1,000, டீ ரூ.100, வடை ரூ.80

கொழும்பு இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை  உயர்ந்து கொண்டே வருகிறது. இலங்கையில் முட்டை மற்றும் கோழிக்கறியின்  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால்  மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும், கோழிக்கறி கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக … Read more

மாநில அளவிலான சிலம்ப போட்டி

திருச்சி, மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று திருச்சியில் நடந்தது. இதில் குழு மற்றும் ஓபன் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.  போட்டிகளின் முடிவில் திருச்சி சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 30 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர்.  இதில் இளஞ்சீரியன், சரனேஷ், கார்த்திகேயன், ராகுல், சுமித்ரா, வினோதீபா, சஞ்சனா, லட்சிதா, ஸ்ரீமன்ஹரி, கஜபிரியா ஆகியோர் … Read more

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானை நேரில் சந்தித்து சரண்ஜித் சிங் சன்னி வாழ்த்து..!

சண்டிகர், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.  பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக பகவந்த் மான் கடந்த 16-ந்தேதி பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் பதவியேற்றார். மேலும்10 மந்திரிகள் அடங்கிய பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை 19-ந்தேதி பதவியேற்றது. … Read more

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; காயத்துடன் விளையாடி சாம்பியனான அமெரிக்க இளம் வீரர்

கலிபோர்னியா, பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் விளையாடினர். இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.  எனினும், இந்த போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய … Read more

ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி – உக்ரைனின் உளவுத்துறை

கீவ் உக்ரைன் போர் காரணமாக ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரஷிய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன. இந்த நிலையில் ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்று  வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.  பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் அலிகார்ஸ் புதின் அரசை கவிழ்க்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு பாய்சன் கொடுத்தோ, சாலை விபத்து ஏற்படுத்தியோ, அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பை … Read more

மணிப்பூர் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள பைரேன் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

புதுடெல்லி,  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதல்-மந்திரி பதவியில் இருக்கும் பைரேன் சிங் மற்றும் மூத்த எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கு இடையே புதிய முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு போட்டி நிலவியது. மணிப்பூரின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று காலையில் தலைநகர் இம்பாலில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது. … Read more

இரவில் பணி முடிந்து 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞரை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்..!!

லண்டன், உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19).  இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில்  இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால், மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை.  அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 … Read more

“ரஷியா மிகப்பெரிய போர்க் குற்றச்செயல்களை செய்து வருகிறது” – ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்!

பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்), உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷியா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் பேசினார்.     அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும்” என்றார்.  இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா … Read more

மணிப்பூர் முதல் மந்திரியாக பைரேன் சிங் பதவியேற்பு

இம்பால்,  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 10-ந்தேதி வெளியாகின. இதில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதல்-மந்திரி பதவியில் இருக்கும் பைரேன் சிங் மற்றும் மூத்த எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கு இடையே புதிய முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு போட்டி நிலவியது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களில் இருவரும் 2 முறை டெல்லி சென்று … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெறும் 20 ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் தற்போது மழை பெய்துவருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.