பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: காங்கிரஸ்
பெங்களூரு, கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று கூறியிருந்தார். பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், “ குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை … Read more