எய்ட்ஸ் நோய்க்கான வைரசை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி காலமானார்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவரான லக் மான்டேக்னீயர் பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.  அவருக்கு வயது 89.  எய்ட்ஸ் எனப்படும் ஆள்கொல்லி நோயை ஏற்படுத்த கூடிய எச்.ஐ.வி. எனப்படும் வைரசை கண்டறிந்தவர்களில் லக் ஒருவர் ஆவார். கடந்த 2008ம் ஆண்டு பிரான்கோயிஸ் பர்ரே-சினோவ்சி மற்றும் ஹரால்டு ஜர் ஹாசன் ஆகியோருடன் அவர் மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார். லக் மற்றும் சினோவ்சி ஆகிய … Read more

கர்நாடகாவில் வரும் திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு; முதல்-மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் … Read more

தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு 5 தமிழக வீரர்கள் தேர்வு

சென்னை, சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியை சேர்ந்த ஆர்.நிஷி தேவஅருள், வி.அரவிந்த், ஆர்.கவியரசன், பி.சதீஷ், என்.திலீபன் ஆகியோர் தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், தூத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளர் பிராங்க் பால் ஜெயசீலன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு … Read more

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி..! காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு

திரிபோலி,  லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7.8% ஆக இருக்கும் – ரிசர்வ் வங்கி கணிப்பு

புதுடெல்லி, மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், தற்போதுள்ள 4 சதவிகிதமே தொடரும் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல, ரி‌வர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவிகிதம் என்ற பழைய நிலையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதியத்தின் கணிப்புப்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த நிதியாண்டில் நாட்டின் … Read more

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி இடையிலான ஆட்டம் "டை"

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணியும் இரவு 7.30 மணியளவில் மோதின.  பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியானது 39-39 என சமனில் முடிந்தது. இதையடுத்து புனேரி பல்டன்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதி வருகிறது.

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,97,076 பேருக்கு தொற்று

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  இதுவரை உலக அளவில் 40.47 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.99 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி … Read more

மராட்டியத்தில் புதிதாக 6,248 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

மும்பை, மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்தநிலையில், தற்பொது குறையத்தொடங்கி உள்ளது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6 ஆயிரத்து 248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,29,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் … Read more

ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தில் கிறுக்கிய காவலாளி; வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே பணிநீக்கம்..!

மாஸ்கோ, ரஷியாவில் நடைபெற்ற கலை கண்காட்சியில் பாதுகாப்பு காவலாளி ஒருவர் போரடித்தது என்று ஓவியம் ஒன்றின் மீது கிறுக்கியதால் சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியம் சிதைக்கப்பட்டது. மேற்கு ரஷியாவில் யெகாடெரின்பர்க் நகரத்தில் உள்ள யெல்ட்சின் மையத்தில் இந்த கலை கண்காட்சி நடைபெற்றது. 60 வயதுள்ள அந்த காவலாளி வேலைக்குச் சென்ற முதல் நாளே, டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாகப் பெறப்பட்ட கலைஞர் லெபோர்ஸ்காயாவின் ‘மூன்று உருவங்கள்’ (Three Figures) என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் … Read more